முதல் பக்கம்

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர்

IMAG0305

       Sri Nandeeswarar                                                      Sri Gautama Maharishi

குருப்ரஹ்மா குருர்விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ குருவே நம:

தத்புருசாய வித்மகே! மகேசுவராய தீமகி! தந்நோ ஜப்திகாரணி ஸ்ரீ  சௌந்திரநாயகி சமேத  கவுதமேஸ்வரர் பிரசோதயாத்!

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் :

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

நமச்சிவாயத் திருப்பதிகம்

காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தருவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)

கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)

மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி தேடியப் பண்பராய் யாரும் காண்பதரிதாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே. (11)

Asta lingams in Thiruvannamalai:-

  1. Indra Lingam (East)
  2. Agni Lingam (South East)
  3. Yama  (Ema) Lingam (South)
  4. Niruthi Lingam (South West)
  5. Varuna Lingam (West)
  6. Vayu Lingam (North West)
  7. Kubera Lingam (North)
  8. Esanya Lingam (North East)

லிங்காஷ்டகம்

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி 

  1. ஓம் சிவாய நம
  2. ஓம் மஹேச்வராய நம
  3. ஓம் சம்பவே நம
  4. ஓம் பினாகிநே நம
  5. ஓம் சசிசேகராய நம
  6. ஓம் வாம தேவாய நம
  7. ஓம் விரூபாக்ஷõய நம
  8. ஓம் கபர்தினே நம
  9. ஓம் நீலலோஹிதாய நம
  10. ஓம் சங்கராய நம
  11. ஓம் சூலபாணயே நம
  12. ஓம் கட்வாங்கிநே நம
  13. ஓம் விஷ்ணுவல்லபாய நம
  14. ஓம் சிபி விஷ்டாய நம
  15. ஓம் அம்பிகா நாதாய நம
  16. ஓம் ஸ்ரீ கண்டாய நம
  17. ஓம் பக்த வத்ஸலாய நம
  18. ஓம் பவாய நம
  19. ஓம் சர்வாய நம
  20. ஓம் திரிலோகேசாய நம
  21. ஓம் சிதிகண்டாய நம
  22. ஓம் சிவாப்ரியாய நம
  23. ஓம் உக்ராய நம
  24. ஓம் கபாலிநே நம
  25. ஓம் காமாரயே நம
  26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம
  27. ஓம் கங்காதராய நம
  28. ஓம் லலாடாக்ஷõய நம
  29. ஓம் காலகாளாய நம
  30. ஓம் க்ருபாநிதயே நம
  31. ஓம் பீமாய நம
  32. ஓம் பரசுஹஸ்தாய நம
  33. ஓம் ம்ருகபாணயே நம
  34. ஓம் ஜடாதராய நம
  35. ஓம் கைலாஸவாஸிநே
  36. ஓம் கவசிநே நம
  37. ஓம் கடோராய நம
  38. ஓம் திரிபுராந்தகாய நம
  39. ஓம் வ்ருஷாங்காய நம
  40. ஓம் வ்ருஷபாரூடாய நம
  41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம
  42. ஓம் ஸாமப்ரியாய நம
  43. ஓம் ஸ்வரமயாய நம
  44. ஓம் த்ரயீமூர்த்தயே நம
  45. ஓம் அநீச்வராய நம
  46. ஓம் ஸர்வஜ்ஞாய நம
  47. ஓம் பரமாத்மநே நம
  48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நம
  49. ஓம் ஹவிஷே நம
  50. ஓம் யக்ஞ மயாய நம
  51. ஓம் ஸோமாய நம
  52. ஓம் பஞ்வக்த்ராய நம
  53. ஓம் ஸதாசிவாய நம
  54. ஓம் விச்வேச்வராய நம
  55. ஓம் வீரபத்ராய நம
  56. ஓம் கணநாதாய நம
  57. ஓம் ப்ரஜாபதயே நம
  58. ஓம் ஹிரண்ய ரேதஸே நம
  59. ஓம் துர்தர்ஷாய நம
  60. ஓம் கிரீசாய நம
  61. ஓம் கிரிசாய நம
  62. ஓம் அநகாய நம
  63. ஓம் புஜங்கபூஷணாய நம
  64. ஓம் பர்க்காய நம
  65. ஓம் கிரிதன்வநே நம
  66. ஓம் கிரிப்ரியாய நம
  67. ஓம் க்ருத்தி வாஸஸே
  68. ஓம் புராராதயே நம
  69. ஓம் மகவதே நம
  70. ஓம் ப்ரமதாதிபாய நம
  71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
  72. ஓம் ஸூக்ஷ்மதனவே நம
  73. ஓம் ஜகத்வ் யாபினே நம
  74. ஓம் ஜகத் குரவே நம
  75. ஓம் வ்யோமகேசாய நம
  76. ஓம் மஹா ஸேந ஜநகயா நம
  77. ஓம் சாருவிக்ரமாய நம
  78. ஓம் ருத்ராய நம
  79. ஓம் பூதபூதயே நம
  80. ஓம் ஸ்தாணவே நம
  81. ஓம் அஹிர் புதன்யாய நம
  82. ஓம் திகம்பராய நம
  83. ஓம் அஷ்டமூர்த்தயே நம
  84. ஓம் அநேகாத்மநே நம
  85. ஓம் ஸாத்விகாய நம
  86. ஓம் சுத்த விக்ரஹாய நம
  87. ஓம் சாச்வதாய நம
  88. ஓம் கண்டபரசவே நம
  89. ஓம் அஜாய நம
  90. ஓம் பாசவிமோசகாய நம
  91. ஓம் ம்ருடாய நம
  92. ஓம் பசுபதயே நம
  93. ஓம் தேவாய நம
  94. ஓம் மஹாதேவாய நம
  95. ஓம் அவ்யயாயே நம
  96. ஓம் ஹரயே நம
  97. ஓம் பூஷதந்தபிதே நம
  98. ஓம் அவ்யக்ராய நம
  99. ஓம் பகதேத்ரபிதே நம
  100. ஓம் தக்ஷõத்வரஹராய நம
  101. ஓம் ஹராய நம
  102. ஓம் அவ்யக்தாய நம
  103. ஓம் ஹஸஸ்ராக்ஷõய நம
  104. ஓம் ஸஹஸ்ரபதே நம
  105. ஓம் அபவர்க்கப்ரதாய நம
  106. ஓம் அனந்தாய நம
  107. ஓம் தாரகாய நம
  108. ஓம் பரமேச்வராய நம

வசிஷ்ட மகரிஷியால் இயற்றப்பட்ட இந்த தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், தரித்திரமும் நோயும் விலகி, சந்தான ப்ராப்தி உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

  1. ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
  2. ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
  3. ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
  4. ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
  5. ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
  6. ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
  7. ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
  8. ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா 
  9. ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
  10. ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
  11. ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
  12. ,ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
  13. ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்ஓம்

ஓம் பைர ருத்ராய, மஹா ருத்ராய, கால ருத்ராய,
கல்பாந்த ருத்ராய, வீர ருத்ராய, ருத்ர ருத்ராய,
கோர ருத்ராய, அகோர ருத்ராய, மார்தாண்ட ருத்ராய,
அண்ட ருத்ராய, ப்ரமாண்ட ருத்ராய, சண்ட ருத்ராய,

பிரசண்ட ருத்ராய, தண்ட ருத்ராய, சூர ருத்ராய,
வீர ருத்ராய, பவ ருத்ராய, பீம ருத்ராய,
அதல ருத்ராய, விதல ருத்ராய, சுதல ருத்ராய,
மஹாதல ருத்ராய, தசாதல ருத்ராய,
தலாதல ருத்ராய, பாதாள ருத்ராய… நமோ நமஹ…..!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி   வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்  அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்  அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்  சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்  குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை  என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.

“கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம் கௌரீ நிரந்த விபூஷித வாமபாகம் நாராயண ப்ரியமநங்க மகாபஹாரம் வாரணாஸீபுர பதிம் பஜ விஸ்வநாதம்.

சிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்
1. இலிங்க மூர்த்தி
2. இலிங்கோற்பவ மூர்த்தி
3. முகலிங்க மூர்த்தி
4. சதாசிவ மூர்த்தி
5. மகா சதாசிவ மூர்த்தி
6. உமா மகேச்வர மூர்த்தி
7. சுகாசந மூர்த்தி
8. உமேச மூர்த்தி
9. சோமஸ்கந்த மூர்த்தி
10. சந்திரசேகர மூர்த்தி
11. விருசபாருட மூர்த்தி
12. விருசபாந்திக மூர்த்தி
13. புஜங்களித மூர்த்தி
14. புஜங்கத்ராச மூர்த்தி
15. சந்தியாநிரந்த மூர்த்தி
16. சதாநிருத்த மூர்த்தி
17. காளிதாண்டவ மூர்த்தி
18. கங்காதர மூர்த்தி
19. கங்காவிசர்ஜன மூர்த்தி
20. திரிபரந்தக மூர்த்தி
21. கல்யாண சுந்தர மூர்த்தி
22. அர்த்தநாரீசுர மூர்த்தி
23. கஜயுத்த மூர்த்தி
24. ஜ்வராபக்ந மூர்த்தி
25. சார்த்தூலஹர மூர்த்தி
26. பாசுபத மூர்த்தி
27. கங்காள மூர்த்தி
28. கேசவார்த்த மூர்த்தி
29. பாஷாடந மூர்த்தி
30. ஸிம்ஹக்த மூர்த்தி
31. சண்டேசாநுக்ர மூர்த்தி
32. தக்ஷிணா மூர்த்தி
33. யோக தக்ஷிணா மூர்த்தி
34. வீணா தக்ஷிணா மூர்த்தி
35. காலாந்தக மூர்த்தி
36. காமதகன மூர்த்தி
37. லகுளீசுவர மூர்த்தி
38. பைரவ மூர்த்தி
39. ஆபதோத்தாரண மூர்த்தி
40. வடுக மூர்த்தி
41. சேத்திரபாலக மூர்த்தி
42. வீரபத்திர மூர்த்தி
43. அகோரஸ்திர மூர்த்தி
44. தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி
45. கிராத மூர்த்தி
46. குரு மூர்த்தி
47. அசுவாருட மூர்த்தி
48. கஜாந்திக மூர்த்தி
49. ஜலந்தரவத மூர்த்தி
50. ஏகபாதத்ரி மூர்த்தி
51. த்ரிபாதத்ரி மூர்த்தி
52. ஏணீதபாத மூர்த்தி
53. கௌரீவரப்ரத மூர்த்தி
54. சக்ரதாநஸ்வரூப மூர்த்தி
55. கௌரிலீலாசம்நவித மூர்த்தி
56. விஷாபஹரண மூர்த்தி
57. கருடாந்திக மூர்த்தி
58. ப்ரஹ்மசிரச்சேத மூர்த்தி
59. கூர்மசம்ஹார மூர்த்தி
60. மச்சசம்ஹார மூர்த்தி
61. வராஹசம்ஹார மூர்த்தி
62. ப்ரார்தநா மூர்த்தி
63. ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி
64. சிஷ்யப்ரவ மூர்த்தி

திருச்சிற்றம்பலம்

ஓம் பரமபதயே நமஹ

தேவ முனி ப்ரவார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
சஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி விஜயாபதி லிங்கம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

1. ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம்.

2. புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட முக்தியைப் பெறலாம்.

3. பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் சேரும்.

4. சந்தன லிங்கம் செய்து வழிபட அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.

5. திருநீறு லிங்கம் (விபூதி லிங்கம்) வைத்து வழிபட எல்லா வித செல்வங்களும் குவியும்.

6. மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ் நாள் கிடைக்கும்.

7. அரிசி மாவால் சிவ லிங்கம் செய்து வழிபட உடல் வலிமை பெறும்.

8. சோறு லிங்கம் (அன்னம் லிங்கம்) செய்து வழிபட உணவுப் பற்றாக்குறை நீங்கும்.

9. பழங்களால் லிங்கம் செய்து வழிபட சிறப்பான இன்பமான வாழ்வு அமையும்.

10. தயிர் லிங்கம் நற்குணத்தைத் தருவார்.

11. தண்ணீர் லிங்கம் – அனைத்தையும் மேன்மையாக்குவார்.

12. கூர்ச்சம் எனப்படும் முடிச்சிட்ட நாணல் லிங்கத்தை வழிபட முக்தி கிடைக்கும்.

13. சர்க்கரை, வெல்லம் லிங்கம் செய்து வழிபட விரும்பிய வாழ்க்கையும், இன்பமும் கிடைக்கும்.

14. பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

15. பசு வெண்ணெய்யை லிங்கம் செய்து வழிபட மன மகிழ்ச்சி ஏற்படும்.

16. ருத்திராட்ச லிங்கத்தை வைத்து வழிபட நல்லறிவு கிடைக்கும்.

இப்படி பல்வேறு சிவ லிங்கத்தை வழிபட்டு அனைத்து வித நல்வினைகளைப் பெற்றிடுங்கள்.

சிவ கவசம்

 ஓம் அஸ்ய ஸ்ரீ சிவகவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய, ருஷபயோகீஸ்வர ருஷி:, அநுஷ்டுப்சந்த; ஸ்ரீசாம்பஸதா சிவோ தேவதா, ஓம் பீஜம், நம: சக்தி:, சிவாயேதி கீலகம், மம ஸ்ரீசாம்பஸதாசிவ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே வினியோக : ஓம் ஸதாசிவாய அங்குஷ்டாப்யாம் நம:, நம் கங்காதராய தர்ஜனீப்யாம் நம, மம ம்ருத்யுஞ்ஜயாய மத்யமாப்யாம் நம:, சிம் சூல பாணயே அனாமிகாப்யாம் நம:, வாம் பினாக பாணயே கனிஷ்டிகாப்யாம் நம:, யம் உமாபதயே கரதலககரப்ருஷ்டாப்யாம் நம: நம:,

(ஓம் சதாசிவாய ஹருதயாய நம:, நம் கங்காதராய சிரஸே ஸ்வாஹா, மம ம்ருத்யுஞ்ஜயாய சிகாயை வஷ்ட், சிம்ஸூல பாணயே கவசாய ஹூம், வாம், பினாகபாணயே நேத்ரத்ரயாய வெளஷட், யம் உமாபதயே அஸ்த் ராயப்பட், பூர்ப்புவஸ்ஸூவ ரோமிதி திக்பந்த :

த்யானம்

வஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரிநயனம்  காலகண்ட்ட மரிந்தமம் ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே சம்பும் உமாபதிம்

ருத்ராக்ஷ கங்கண லஸத் புஜதண்டயுக்ம : பாலாந் தராளஸித பஸ்மலஸத் த்ரிபுண்ட்ர : பஞ்சாக்ஷரம் பரிபடன் வரராஜ மந்த்ரம் த்யாயேத்ஸதா பசுபதிம் சரணம் வ்ரஜேதா!

அதாபரம் ஸர்வ புராண குஹ்யம் நிஸ்ஸேஷ பாபௌக ஹரம் பவித்ரம் ஜயப்ரத ஸர்வ விபத் ப்ரமோசனம்
வக்ஷ்யாமி சைவம் கவசம் ஹிதாய

நமஸ்க்ருத்ய மஹாதேவம் விஸ்வவியாபி நமீஸ்வரம் லக்ஷ்யே ஸிவமயம் வர்ம ஸர்வரக்ஷõகரம் ந்ருணாம்

ஸுசௌ தேஸே ஸமாஸீனோ யதாவத் கல்பி தாஸன ஜிதேந்த்ரியோ ஜிதப்ராண: சிந்தயேச் சிவமவ்யயம்

ஹ்ருதபுண்டரீகாந்தர ஸன்னிவிஷ்டம் ஸ்வதேஜஸா வ்யாப்த நபோவகாஸம் அதீத்ரியம் ஸூக்ஷ்மமனந்த மாத்யம் த்யாயேத் பரானந்தமயம் மஹேஸம்

த்யானாவதூதா கிலகர்ம பந்த : சிரம் சிதானந்த நிமக்ன சேதா: ஷடக்ஷரந்யாஸ ஸமாஹிதாத்மா ஸைவேன குர்யாத் கவசேன ரக்ஷõம்

மாம்பாது தேவோ கில தேவதாத்மா ஸம்ஸாரகூபே பதிதம் கபீரே தம் நாமதிவ்யம் வரமந்த்ர மூலம் துனோது மே ஸர்வமகம் ஹ்ருதிஸ்தம்

ஸர்வத்ரமாம் ரக்ஷது விஸ்வமூர்த்தி: ஜ்யோதிர் மயானந்த கனஸ்சி தாத்மா அணோரணீயா நுருஸக்திரேக: ஸஈஸ்வர : பாது பயாதஸேஷாத்

யோபூத் ஸ்வரூபேண பிபர்திவிஸ்வம் பாயாத்ஸபூமேர் கிரிஸோஷ்ட மூர்த்தி: யோபாம் ஸ்வரூபேண ந்ருணாம்கரோதி ஸம்ஜீவனம் ஸோவதுமாம் ஜலேப்ய:

கல்பாவஸானே புவனானி தக்த்வா ஸர்வாணி யோ ந்ருத்யதி பூரிலீல: ஸகால ருத்ரோ வதுமாம் தவாக்னே: வாத்யாதி பீதா தகிலாச்ச தாபாத்

ப்ரதீப்த வித்யுத் கனகாவபாஸோ வித்யாவராபீதி குடாரபாணி சதுர்முகஸ் தத்புருஷஸ் த்ரிணேத்ர : ப்ராச்யாம் ஸதிதோரக்ஷது மாமஜஸ்ரம்

குடார வேதாங்குஸ பாசஸுல கபாலடக்காக்ஷமாலாக்னி குணாந்ததான:
சதுர்முகோ நீலருசி ஸ்த்ரிநேத்ர:பாயாதகோரோ திஸி தக்ஷிணேஸ்யாம்

குந்தேந்து ஸங்க ஸ்படிகாவபாஸோ வேதாக்ஷமாலா வரதா பயாங்க: த்ர்யக்ஷ: சதுர்வக்த்ர உருப்ரபாவ: ஸத்யோதி ஜாதோ வதுமாம் ப்ரதீச்யாம்

வராக்ஷமாலா பயடங்க ஹஸ்த : ஸரோஜகிஞ்ஜல்க ஸமானவர்ண: த்ரிலோசன: சாரு சதுர்முகோ மாம் பாயா துதீச்யாம் திஸி வாம தேவ:

வேதோ பயேஷ்டாங்குஸ பாஸடங்க கபாலடக்காக்ஷக ஸூலபாணி: ஸிதத்யுதி: பஞ்சமுகோவதான்மாம் ஈஸான ஊர்த்வம் பரமப்ரகாஸ:

மூர்த்தான மவ்யான் மமசந்த்ரமௌளி: பாலம் மமாவ்யாதத பாலநேத்ர: நேத்ரே மமாவ்யாத் பகநேத்ரஹாரீ நாஸாம் ஸதா ரக்ஷது விஸ்வநாத:

பாயா ச்ருதீமே ஸ்ருதிகீதகீர்த்தி: கபோல மவ்யாத் ஸததம் கபாலீ வக்த்ரம் ஸதா ரக்ஷது பஞ்சவக்த்ர: ஜிஹ்வாம் ஸதா ரக்ஷது வேதஜிஹ்வ:

கண்ட்ம் கிரீஸோ வது நீலகண்ட: பாணித்வயம் பாது பினாக பாணி: தோர்மூலமவ்யான் மமதர்மபாஹு: வக்ஷஸ்தலம் தக்ஷமகாந்த கோவ்யாத்

மமோதரம் பாது கிரீந்த்ர தன்வா மத்யம் மமாவ்யான் மதனாந்தகாரீ ஹேரம்பதாதோ மம பாது நாபீம் பயாத்கடிம் தூர்ஜடி ரீஸ்வரோ மே

ஊருத்வயம் பாது குபேரமித்ர: ஜாதுத்வயம் மே ஜகதீஸ்வரோவ்யாத் ஜங்காயுகம் புங்கவகேதுரவ்யாத் பாதௌ மம வ்யாத் ஸுரவந்த்ய பாத:

மஹேஸ்வர: பாது தினாதியாமே மாம் மத்யயாமே வது வாமதேவ: த்ர்யம்பகம் பாது த்ருதீயயாமே வ்ருஷத்வஜ: பாது தினாந்த்ய யாமே

பாயாந் நிஷாதௌ ஸஸிஸேகரோமாம் கங்காதரோ ரக்ஷது மாம் நிஸீதே கௌரீபதி: பாது நிஷாவஸானே ம்ருத்யுஞ்ஜயோ ரக்ஷது ஸர்வகாலம்

அந்த ஸ்திதம் ரக்ஷது ஸங்கரோமாம் ஸ்தாணு ஸதாபாது பஹிஸ்திதம்மாம் ததந்தரே பாது பதி: பஸூனாம் ஸதாஸிவோ ரக்ஷது மாம் ஸமந்தாத்

திஷ்டந்தமவ்யாத் புவனைகநாத: பாயாத் வ்ரஜந்தம் ப்ரமதாதி நாத: வேதாந்த வேத்யோ வதுமாம் நிஷண்ணம் மாமவ்யய: பாது ஸிவ: ஸயாணம்

மார்க்கேஷு மாம்ரக்ஷது நீலகண்ட: ஸைலாதி துர்கேஷு புரத்ரயாரி: அரண்ய வாஸாதி மஹாப்ரவாஸே பாயான் ம்ருகவ்யாத உதாரஸக்தி:

கல்பாந்த காலோக்ர படுப்ரகோப ஸ்புடாட்டஹாஸோ ச்சலிதாண்டகோஸ: கோராரி ஸேனார்ணவ துர்நிவார மஹாபயாத் ரக்ஷது வீரபத்ர:

பத்யஸ்வ மாதங்க கடாவரூத ஸஹஸ்ர லக்ஷõயுத கோடி பீஷணம் அöக்ஷளஹிணீனாம் ஸதமாததாயினாம் சிந்த்யான்ம்ருடோ கோர குடாரதாரயா

நிஹந்து தஸ்யூன் ப்ரளயாநலார்ச்சி ஜ்வலத்ரிஸூலம் த்ரிபுராந்தகஸ்ய  ஸார்தூல ஸிம்ஹர்க்ஷ வ்ருகாதி ஹிம்ஸ்ரான் ஸந்த்ராஸயத்வீஸ தநு: பினாக:

துஸ்வப்ந துஸ்ஸகுந துர்கதி தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ் ஸஹ துர்யசாம்ஸி

உத்பாத தாப விஷபீதி மஸத் க்ரஹார்தீன்
வ்யாதீம்ஸ்ச நாஸயதுமே கஜதாமதீஸ

**************************************************************************

ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே  ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம் பக்திப்ராதாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே

மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.

ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம் தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம் நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்

பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

அவந்திகாயாம் விஹிதாமதாரம் முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம் அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்

அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.

காவேரிகா நர்மதாயோ பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேக பீடே

காவேரி, நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.

பூர்வாத்தரே பாரவிகாபிதா நே ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம் ஸுராஸுராராதித பாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி

வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன்.

ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே விபூஷிதாங்கம் விவிதை: க போகை ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம்
ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே

தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன்.

ஸாநந்தமாநந்தவநே வஸந்தம் ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் வாரணாஸி நாதமநாத நாதம்
ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே

ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன்.

ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை: ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி

புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.

ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம் கோதாவரீ பவித்ர தேசே யந்தர்சனாத் பாதகஜாதநா:
ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே

ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.

ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை: ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே
ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு

பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று  போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.

ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந் ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம் வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம் ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம்

ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன்.

ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா ப்ராத: படந்த: அமல மா நசாஸ்சதே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை:ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி

இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்.

 

 

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி