ஸ்ரீ நாராயணன்

 

விஷ்ணு காயத்ரி 

ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய  தீமஹி தந்நோ விஷ்ணுர் பிரசோதயாத்

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய

KLIM KRISHNAYA GOVINDAYA GOPIJANA VALLABHAYA NAMAHA 

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.

முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.

இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் தொடங்குதல் கூடுதல் நலம் பயக்கும். இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை. எல்லாரும், காலையில் நீராடியவுடனும், மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.

ஓம் கேசவாய நமஹ:
ஓம் சங்கர்ஷணாய நமஹ:
ஓம் நாராயணாய நமஹ:
ஓம் வாசுதேவாய நமஹ:
ஓம் மாதவாய நமஹ:
ஓம் ப்ரத்யும்னாய நமஹ:
ஓம் கோவிந்தாய நமஹ:
ஓம் அநிருத்தாய நமஹ:
ஓம் விஷ்ணவே நமஹ:
ஓம் புருஷோத்தமாய நமஹ:
ஓம் மதுசூதனாய நமஹ:
ஓம் அதோக்ஷஜாய நமஹ:
ஓம் திரிவிக்ரமாய நமஹ:
ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ:
ஓம் வாமனாய நமஹ:
ஓம் அச்சுதாய நமஹ:
ஓம் ஸ்ரீதராய நமஹ:
ஓம் ஜனார்தனாய நமஹ:
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ:
ஓம் உபேந்த்ராய நமஹ:
ஓம் பத்மநாபாய நமஹ:
ஓம் ஹரயே நமஹ:
ஓம் தாமோதராய நமஹ:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ ஹயக்ரீவர் 

ஓம் நாராயணாய வித்மஹே பூமி பாலாய தீமஹி
தந்நோ வராஹ ப்ரசோதயாத்.

ஸ்ரீ  ஸுதர்ஸனா

ஓம் ஸுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்

  • யோகரதோ வா போகரதோ வா சங்கர தோ வா சங்க விஹீனா யஸ்ய பிரம்மணி ரமதே சித்தம்  நந்ததி நந்ததி நந்தத் யேவா.
  • பகவத் கீதா கிஞ்சித தீதா கங்காஜல லவ கணிகா பீதா
    சக்ரிதபி என முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா
  • லக்ஷ்மீபதே  கமலநாப  சுரேஷ  விஷ்ணு வைகுண்ட  கிருஷ்ண  மதுசூதன  புஷ்காரக்ஷ  பிரம்மண்ய  கேசவ  ஜனார்த்தன  வாசுதேவா  தேவேச  தேஹி  மமதேஹி  கிருபணஸ்ய கராவலம்பம் .
  • பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம் மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
    உன் சேவடி செவ்வித்திருக்காப்பு அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படையோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
  1. ஓம் அப்பா போற்றி
  2. ஓம் அறமே போற்றி
  3. ஓம் அருளே போற்றி
  4. ஓம் அச்சுதா போற்றி
  5. ஓம் அரவ சயனா போற்றி
  6. ஓம் அரங்கமா நகராய் போற்றி
  7. ஓம் அற்புத லீலா போற்றி
  8. ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி
  9. ஓம் அனுமந்தன் தேவே போற்றி
  10. ஓம் ஆதியே அனாதி போற்றி
  11. ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
  12. ஓம் ஆதி மூலனே போற்றி
  13. ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
  14. ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
  15. ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
  16. ஓம் உமையம்மை அண்ணா போற்றி
  17. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
  18. ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
  19. ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
  20. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
  21. ஓம் எண்குண சீலா போற்றி
  22. ஓம் ஏழைப்பங்காளா போற்றி
  23. ஓம் எழில்நிற வண்ணா போற்றி
  24. ஓம் எழில்மிகு தேவே போற்றி
  25. ஓம் கலியுக வரதா போற்றி
  26. ஓம் கண்கண்ட தேவே போற்றி
  27. ஓம் கருடவா கனனே போற்றி
  28. ஓம் கல்யாணமூர்த்தி போற்றி
  29. ஓம் காமரு தேவே போற்றி
  30. ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
  31. ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
  32. ஓம் கோவிந்தா-முகுந்தா போற்றி
  33. ஓம் சர்வலோ கேசா போற்றி
  34. ஓம் சாந்தகுண சீலா போற்றி
  35. ஓம் சீனிவாசா போற்றி
  36. ஓம் சிங்காரமூர்த்தி போற்றி
  37. ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
  38. ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
  39. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
  40. ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
  41. ஓம் திருமகள் மணாளா போற்றி
  42. ஓம் திருமேனி உடையாய் போற்றி
  43. ஓம் திருவேங்கடவா போற்றி
  44. ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
  45. ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
  46. ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
  47. ஓம் கடலமு தளித்தாய் போற்றி
  48. ஓம் நந்தகோ பாலா போற்றி
  49. ஓம் நான்முகன் பிதாவே போற்றி
  50. ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
  51. ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
  52. ஓம் நரசிம்ம தேவே போற்றி
  53. ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
  54. ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
  55. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
  56. ஓம் தசாவ தாரா போற்றி
  57. ஓம் தயாநிதி -ராமா போற்றி
  58. ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி
  59. ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
  60. ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
  61. ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
  62. ஓம் பாண்டவர் துணைவா போற்றி
  63. ஓம் பரந்தாமா- கண்ணா போற்றி
  64. ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே போற்றி
  65. ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
  66. ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
  67. ஓம் வாமன வரதா போற்றி
  68. ஓம் உலகினை அளந்தாய் போற்றி
  69. ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
  70. ஓம் பரகதி அருள்வாய் போற்றி
  71. ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
  72. ஓம் சபரியின் கனியே போற்றி
  73. ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
  74. ஓம் நற்கதி தந்தாய் போற்றி
  75. ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
  76. ஓம் வைகுண்ட வாசா போற்றி
  77. ஓம் முழுமதி வதனா போற்றி
  78. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
  79. ஓம் கமலக் கண்ணா போற்றி
  80. ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
  81. ஓம் கஸ்தூரி திலகா போற்றி
  82. ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
  83. ஓம் பவளம் போல் வாயா போற்றி
  84. ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
  85. ஓம் நான்கு புயத்தாய் போற்றி
  86. ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
  87. ஓம் சங்குசக் கரனே போற்றி
  88. ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
  89. ஓம் கோபிகள் லோலா போற்றி
  90. ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
  91. ஓம் வேணுகோ பாலா போற்றி
  92. ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
  93. ஓம் புருடோத் தமனே போற்றி
  94. ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி
  95. ஓம் மாயா வினோதா போற்றி
  96. ஓம் மனநிலை தருவாய் போற்றி
  97. ஓம் விஜயரா கவனே போற்றி
  98. ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி
  99. ஓம் பதும நாபனே போற்றி
  100. ஓம் பதமலர் தருவாய் போற்றி
  101. ஓம் பார்த்தசா ரதியே போற்றி
  102. ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
  103. ஓம் கரிவரத ராஜா போற்றி
  104. ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
  105. ஓம் சுந்தர ராஜா போற்றி
  106. ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
  107. ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
  108. ஓம் அரி அரி நமோ நாராயணா

 

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

  1. அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
  2. உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;
  3. மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
  4. பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:
  5. பூமகள் நாயக போற்றி;
  6. ஓசை மாமத யானை உதைத்தவ போற்றி;
  7. அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
  8. பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;
  9. அத்தா போற்றி; அரியே போற்றி;
  10. பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;
  11. அகவுயிர்க் கமுதே போற்றி;
  12. மாயச்சகடம் உதைத்தாய் போற்றி;
  13. ஞானச்சுடரே போற்றி;
  14. சொல்லுளாய் போற்றி;
  15. உடையாய் போற்றி;
  16. உத்தமா போற்றி;
  17. அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
  18. கதியே போற்றி;
  19. கரியாய் போற்றி;
  20. குறளாய் போற்றி;
  21. குருமணி போற்றி;
  22. மறையாய் போற்றி;
  23. மாதவா போற்றி;
  24. அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
  25. சிந்தனைக் கினியாய் போற்றி;
  26. சிற்றாயர்சிங்கமே போற்றி;
  27. சேயோய் போற்றி;
  28. அங்கதிர் அடியாய் போற்றி;
  29. அசுரர்கள்நஞ்சே போற்றி;
  30. நாதா போற்றி;
  31. பஞ்சவர் தூதா போற்றி;
  32. பாரிடம்கீண்டாய் போற்றி;
  33. கேசவா போற்றி;
  34. நீண்டாய் போற்றி;
  35. நிமலா போற்றி;
  36. முதல்வா போற்றி;
  37. முத்தா போற்றி;
  38. அழகா போற்றி ;
  39. அமுதே போற்றி;
  40. கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
  41. அஞ்சனக் குன்றே போற்றி;
  42. அஞ்சன வண்ணா போற்றி;
  43. வள்ளலே போற்றி;
  44. அண்ணா போற்றி;
  45. அண்ணலே போற்றி;
  46. அச்சுதா போற்றி;
  47. அச்சனே போற்றி;
  48. அச்சுவைக் கட்டியே போற்றி;
  49. அந்தணர் சிந்தையாய் போற்றி;
  50. சீதரா போற்றி;
  51. அந்த முதல்வா போற்றி;
  52. அந்தரம் ஆனாய் போற்றி;
  53. அருவா போற்றி;
  54. வானே தருவாய் போற்றி;
  55. வேதப்பிரானே போற்றி;
  56. பிறப்பிலி போற்றி;
  57. இராமா போற்றி;
  58. இறைவா போற்றி;
  59. வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
  60. அக்கா ரக்கனி போற்றி;
  61. அங்கண்நாயக போற்றி;
  62. நம்பீ போற்றி;
  63. காய்சின வேந்தே போற்றி;
  64. அங்கை ஆழிகொண் டவனே போற்றி;
  65. அந்தமில் ஊழியாய் போற்றி;
  66. உலப்பிலாய் போற்றி;
  67. காரணா போற்றி;
  68. கள்வா போற்றி;
  69. சீரணா போற்றி;
  70. கேசவா போற்றி;
  71. உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
  72. அரையா போற்றி;
  73. அண்டா போற்றி;
  74. அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
  75. அந்தணர் அமுதே போற்றி;
  76. ஆநிரை காத்தாய் போற்றி;
  77. கருமணி போற்றி;
  78. கூத்தா போற்றி;
  79. குறும்பா போற்றி;
  80. ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
  81. மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
  82. மூதறி வாளனே போற்றி;
  83. முதுவேத கீதனே போற்றி;
  84. கேடிலி போற்றி;
  85. அடர்பொன் முடியாய் போற்றி;
  86. மென்தளிர் அடியாய் போற்றி;
  87. அமலா போற்றி;
  88. அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
  89. கடவுளே போற்றி;
  90. கண்ணாவாய் போற்றி;
  91. அரவப் பகையூர் பவனே போற்றி;
  92. குரவை கோத்த கு.கா போற்றி;
  93. அலரே போற்றி;
  94. அரும்பே போற்றி;
  95. நலங்கொள் நாத போற்றி;
  96. நான்மறை தேடி ஓடும் செல்வா போற்றி;
  97. ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
  98. மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
  99. தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
  100. அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
  101. கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
  102. அணிவரை மார்ப போற்றி;
  103. அரிகுலம் பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
  104. அரிமுக போற்றி;
  105. அந்தணா போற்றி;
  106. உரகமெல் லணையாய் போற்றி;
  107. உலகம்தாயவ போற்றி;
  108. தக்காய் போற்றி;
  109. ஆயர்தம் கொழுந்தே போற்றி;
  110. யார்க்கும் அரிநவ போற்றி;
  111. அப்பனே போற்றி;
  112. கரநான் குடையாய் போற்றி;
  113. கற்பகக் காவன நற்பல தோளாய் போற்றி;
  114. ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
  115. ஆலநீள் கரும்பே போற்றி;
  116. அலையார் வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
  117. அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
  118. செப்பம துடையாய் போற்றி;
  119. சேர்ந்தார் தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
  120. காவல போற்றி;
  121. கற்கீ போற்றி;
  122. குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
  123. நன்றெழில் நாரண போற்றி;
  124. நந்தா விளக்கே போற்றி;
  125. வேதியா போற்றி;
  126. அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
  127. சீலா போற்றி;
  128. செல்வா போற்றி;
  129. பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
  130. மிக்காய் போற்றி;
  131. ஒண்சுடர் போற்றி;
  132. சக்கரச் செல்வா போற்றி;
  133. நலனுடை ஒருவா போற்றி;
  134. ஒண்சுடர் போற்றி;
  135. அருமறை தந்தாய் போற்றி;
  136. ஆணிச் செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
  137. எம்பிரான் போற்றி;
  138. எங்கோன் போற்றி;
  139. உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
  140. பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
  141. பரமா போற்றி;
  142. பதியே போற்றி;
  143. மரகத வண்ணா போற்றி;
  144. மறைவார் விரித்த விளக்கே போற்றி;
  145. மன்றில் குரவை பிணைந்த மாலே போற்றி;
  146. போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
  147. மாதுகந்த மாரபா போற்றி;
  148. முனிவரர் விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
  149. அழக்கொடி யட்டாய் போற்றி;
  150. அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
  151. அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி;
  152. ஆதி பூதனே போற்றி;
  153. புராண போற்றி;
  154. புனிதா போற்றி;
  155. புலவா போற்றி;
  156. தனியா போற்றி;
  157. தத்துவா போற்றி;
  158. நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
  159. நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
  160. ஆளரி போற்றி;
  161. ஆண்டாய் போற்றி;
  162. வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
  163. விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
  164. உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
  165. மல்லா போற்றி;
  166. மணாளா போற்றி;
  167. எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
  168. வையந் தொழுமுனி போற்றி;
  169. சக்கரக் கையனே போற்றி;
  170. கண்ணா போற்றி;
  171. குணப்பரா போற்றி;
  172. கோளரி போற்றி;
  173. அணைப்பவர் கருத்தாய் போற்றி;
  174. அந்தணர் கற்பே போற்றி;
  175. கற்பகம் போற்றி;
  176. அற்புதா போற்றி;
  177. அற்றவர் கட்கரு மருந்தே போற்றி;
  178. மருத்துவ போற்றி;
  179. இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
  180. உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
  181. தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
  182. வாமா போற்றி;
  183. வாமனா போற்றி;
  184. ஆமா றறியும் பிரானே போற்றி;
  185. ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
  186. ஆரெழில் வண்ண போற்றி;
  187. ஆரா அமுதே போற்றி;
  188. ஆதிநீ போற்றி;
  189. கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
  190. நண்ண லரிய பிரானே போற்றி;
  191. கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
  192. தொல்லையஞ் சோதி போற்றி;
  193. ஞானம் எல்லையி லாதாய் போற்றி;
  194. கவிக்கு நிறை பொருள் போற்றி;
  195. நீதியே போற்றி;
  196. அறந்தா னாகித் திரிவாய் போற்றி; 200
  197. மதகளி றன்னான் வெல்க;
  198. மதுரைப் பதியினன் வெல்க;
  199. பத்தராவி வெல்க;
  200. அசுரர் கூற்றம் வெல்க;
  201. மணித்தேர்
  202. விசயற் கூர்ந்தான் வெல்க;
  203. யசோதைதன் சிங்கம் வெல்க;
  204. சிலையாளன் வெல்க;
  205. செங்கதிர் முடியான் வெல்க;
  206. அடலாழிப் பிரானவன் வெல்க;
  207. பீடுடையான் வெல்க; 410.
  208. இராவ ணாந்தகன் வெல்க;
  209. அந்தமில் புகழான் வெல்க;
  210. புதுனலுருவன் வெல்க;
  211. திகழும் பவளத் தொளியான் வெல்க;
  212. அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
  213. இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
  214. ஆநிரை மேய்த்தான் வெல்க;
  215. வைத்த மாநிதி வெல்க;
  216. மண் ணிரந்தான் வெல்க;
  217. மத்த மாமலை தாங்கீ வெல்க;             420
  218. சித்திரத் தேர்வலான் வெல்க;
  219. சீற்றம் இல்லவன் வெல்க;
  220. இழுதுண்டான் வெல்க;
  221. மல்லரை யட்டான் வெல்க;
  222. மாசறு சோதீ வெல்க;
  223. சுடர்விடு கமலப் பாதன் வெல்க;
  224. பகலாளன் வெல்க;
  225. படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
  226. இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க;   431
  227. அரட்டன் வெல்க;
  228. அரியுருவன் வெல்க;
  229. இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
  230. வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
  231. ஓணத்தான் வெல்க;
  232. உந்தியில் அயனைப்படைத்தான் வெல்க;
  233. பருவரையாற் கடலை அடைத்தான் வெல்க;
  234. ஆழிசங்கு வாழ்வில்தண்டா திப்பல் படையான் வெல்க;
  235. அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
  236. அரியுரு வாகி யந்தியம் போதில்
  237. அரியை யழித்தவன் வெல்க;
  238. அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க; 440
  239. மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும் கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
  240. ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
  241. ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
  242. பத்திரா காரன் வெல்க;
  243. பழமறை தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
  244. ஆடும் கருளக் கொடியான் வெல்க;
  245. அடைந்தார்க் கணியன் வெல்க;
  246. கடலைக் கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
  247. காண்டற் கரியவன் வெல்க;
  248. புள்வாய்  கீண்டான் வெல்க;
  249. கேடிலான் வெல்க;
  250. கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
  251. வையம் அளந்தான் வெல்க;
  252. யாவையும் ஆனான் வெல்க;
  253. அமுதுண்டான் வெல்க;
  254. ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
  255. அவலம் களைவான் வெல்க;
  256. என்றானும் அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
  257. அறவ னாயகன் வெல்க;
  258. மனத்து  அறமுடை யோர்கதி வெல்க;
  259. அறுசுவை அடிசில் வெல்க;
  260. ஆதிப்பிரான் வெல்க;
  261. வடிசங்கு கொண்டான் வெல்க;
  262. வண்புகழ் நாரணன் வெல்க;
  263. நாயகன் வெல்க;
  264. ஆர மார்பன் வெல்க;
  265. அண்டர் தங்கோன் வெல்க;
  266. தம்பிரான் வெல்க;
  267. சங்கமிடந்தான் வெல்க;
  268. சனகன்  மருமகன் வெல்க;
  269. மதுசூதன் வெல்க;
  270. உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
  271. எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
  272. நங்கள் நாதன் வெல்க;
  273. நல்வினைக்கு இன்னமுது வெல்க;
  274. ஏழிசை வெல்க;
  275. பிள்ளை மணாளன் வெல்க;
  276. வலத்துப் பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
  277. நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க;               480
  278. அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
  279. சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
  280. அனந்த சயனன் வெல்க;
  281. இலங்கையைச் சினந்தனால் செற்ற கோமகன் வெல்க;
  282. ஆய்ப்பாடி நம்பி வெல்க;
  283. நஞ்சுகால் பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
  284. உலகளிப் பானடி நிமிர்த்தான் வெல்க;
  285. உலகமூன் றுடையான் வெல்க;
  286. உறங்குவான் போல யோகுசெய் பெருமான் வெல்க;
  287. காலசக் கரத்தான் வெல்க;
  288. காலநேமி   காலன் வெல்க;
  289. காமரூபி வெல்க;
  290. பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
  291. பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
  292. மறைப்பெ ரும்பொருள் வெல்க;
  293. மனனுணர் அளவிலன் வெல்க;
  294. அண்டவாணன் வெல்க;
  295. வளரொளி யீசன் வெல்க;
  296. வருநல்தொல்கதி வெல்க;
  297. தூமொழியான் வெல்க;         500
  298. செல்வமல்கு சீரான் வெல்க;
  299. செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
  300. வைப்பே வெல்க;
  301. மருந்தே வெல்க;
  302. வியலிட முண்டான் வெல்க;
  303. நமன் தமர்க்கு
  304. அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
  305. ஆய்மகள் அன்பன் வெல்க;
  306. வஞ்சப் பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
  307. அழகியான் வெல்க;
  308. அலங்காரன் வெல்க;           510
  309. தழலைந் தோம்பி வெல்க;
  310. தக்கணைக்குமிக்கான் வெல்க;
  311. விண்ணவர் கோன் வெல்க;
  312. திக்குநிறை புகழான் வெல்க;
  313. திருவாழ் மார்பன் வெல்க;
  314. மதுரவாறு வெல்க;
  315. கார்மலி வண்ணன் வெல்க;
  316. குவலயத் தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
  317. செங்கமல நாபன் வெல்க;
  318. நரங்கலந்த சிங்கம் வெல்க;
  319. சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே வெல்க;
  320. தேங்கோதநீர் உருவன் வெல்க;
  321. பிள்ளையரசு வெல்க;
  322. பிள்ளைப்பிரான் வெல்க;
  323. வெள்ளியான் வெல்க;
  324. வேதமயன் வெல்க;
  325. வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
  326. ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;
  327. ஆழி வலவன் வெல்க;
  328. வாயழகன் வெல்க;                 531
  329. நிலமுன மிடந்தான் வெல்க;
  330. நீலச்சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
  331. அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
  332. பாரதம் பொருதோன் வெல்க;
  333. பாரளந்த பேரரசு வெல்க;
  334. பெற்றமாளி வெல்க;
  335. காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
  336. கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
  337. வேதத்து அமுதமும் பயனும் வெல்க;                 540
  338. வேத முதல்வன் வெல்க;
  339. வேதத்தின் சுவைப் பயன் வெல்க;
  340. சுடரான் வெல்க;
  341. நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
  342. ஆதி மூர்த்தீ வெல்க;
  343. அந்தியம் போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
  344. ஆமையும் ஆனவன் வெல்க;
  345. துளவுசேர் தாமநீண் முடியன் வெல்க;
  346. தனிப்பெரு மூர்த்தி வெல்க;
  347. முண்டியான் சாபம் தீர்த்தான் வெல்க;
  348. தெய்வம் வெல்க;
  349. வளைவணற் கிளையவன் வெல்க;
  350. தயிரொடு   அளைவெணெய் உண்டான் வெல்க;
  351. மெய்ந்நலம் தருவான் வெல்க;
  352. சாமமா மேனி உருவான் வெல்க;
  353. உய்யவுலகு படைத்து உண்டமணி வயிறன் வெல்க;
  354. அண்டமாய் எண்டிசைக் குமாதி வெல்க;
  355. அண்டமாண் டிருப்பான் வெல்க;
  356. இருங்கைம் மாவின் மருப்பொசித் திட்டான் வெல்க;
  357. மரமெய்த திறலான் வெல்க;
  358. தீமனத் தரக்கர் திறலை யழித்தான் வெல்க;
  359. திருவின் மணாளன் வெல்க;
  360. மண்ணுயிர்க் கெல்லாம் கணாளன் வெல்க;
  361. மண்ணழகன் வெல்க;
  362. கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
  363. வைகுந்த நாதன் வெல்க;
  364. வைகுந்தச் செல்வன் வெல்க;
  365. செங்கணான் வெல்க;
  366. தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
  367. கூரா ராழிப் படையவன் வெல்க;                   570
  368. காரேழ் கடலேழ் மலையே ழுலகும் உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
  369. தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
  370. கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
  371. குடமாடு கூத்தன் வெல்க;
  372. குவளை மலர்வணன் வெல்க;
  373. மண்கொண்டான் வெல்க;
  374. புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
  375. உலகுண்ட வாயன் வெல்க;
  376. ஊழியேழ் உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
  377. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க;
  378. கடல்படா அமுதே வெல்க;
  379. அம்பொனின் சுடரே வெல்க;
  380. நற் சோதீ வெல்க;
  381. அமரர் முழுமுதல் வெல்க;
  382. அமரர்க்கு அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
  383. அமரர்க் கரியான் வெல்க;
  384. பொதிசுவை அமுதம் வெல்க;
  385. அறமுதல்வன் வெல்க;
  386. அயனை யீன்றவன் வெல்க;
  387. ஆலினிலைத் துயின் றவன் வெல்க;
  388. துவரைக்கோன் வெல்க
  389. அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
  390. இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
  391. விழுக்கையாளன் வெல்க;
  392. துளவம் தழைக்கும் மார்பன் வெல்க;
  393. அளத்தற்கு அரியவன் வெல்க;
  394. அயோத்தி யுளார்க்கு உரியவன் வெல்க;
  395. உயிரளிப்பான் வெல்க;
  396. ஏழுல குக்குயிர் வெல்க;
  397. ஆற்றல் ஆழியங் கையமர் பெருமான் வெல்க.

ஓம்   நமோ   நாராயணாய   ஓம்   நமோ   நமோ . .

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி