புதன்கிழமை

விநாயகர்
வக்ர துண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ர‌ப !
அவிக்னம் குருமே தேவ‌
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

முருகன்
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க -செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் !

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

சிவன்
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே.

அம்பாள்
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

சரஸ்வதி துதி
வெள்ளை கலையுடுத்தி வெள்ளை பணிபூண்டு
வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்

விஷ்ணு
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா வென்ற யிரண்டெழுத்தினால்

Sri Ramar

Hari Rama Hari Rama Rama Rama Hari Hari

நவக்ரஹம்: புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி