இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார்.சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். .யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.
யமாய தர்மராஜாய ம்ருத்யேவச அந்தகாயச ைவவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச ஓளமதும்பராய தத்னா ய நீலாய பரேமஷ்டிேன விருேகாதராய சித்ராய சித்ரகுப்தாய ைவ நம.
யம் யமாய நம. என்ற மந்திரத்ைத பரணி நட்சத்திர நாளிேலனும் இந்தச் ெசய்யுைள ெசால்லி வணங்குவது நலம் தரும் யமதர்மராஜனின் அருள் ஆனந்தத்ைத வழங்கும்.
“ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ
துர்மரணம் நிகழாமல் இருக்க
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்
ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்
ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்
ஓம் யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாயச
தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நமஹ
ஆளீன பைரவன் துர்காம் அபயங்கர ஷண்முகை|
வாஸு தேவம்ச வாஞ்சேசம் மங்களாக்யம் நமாம்யஹம் ஸர்வபூதக்ஷயாய.
தீபாவளி அன்று யம தர்ப்பணம் தெரியுமா !!
தீபாவளியன்று யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும். அன்று காலை ஸ்நானம் சந்தியா வந்தனம் முடித்துவிட்டு, காலை 7 மணிக்குள்
கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு ஆஸ்வயுஜ க்ருஷ்ன பக்ஷ சதுர்தசீ புண்ய காலே யமதர்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து கொண்டு பூணல் வலம் , மஞ்சள் கலந்த சோபன அக்ஷதையால் / சாதாரண அரிசி அட்சதை யால் சுத்த ஜலத்தால் தர்பணம் செய்யவும். பூணல் இடம் கிடையாது. எள்ளு கிடையாது.
ஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்ம யோஹோ என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.
யமாய நம: யமம் தர்பயாமி; தர்மராஜாய நம: தர்மராஜம் தர்பயாமி; ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி[; அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி; வைவஸ்வதாய நம: வைவச்வதம் தர்பயாமி.; காலாய நம; காலம் தர்பயாமி;
ஸர்வபூத க்ஷயாய நம; ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி; ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி; த்த்னாய நம; த்த்னம் தர்பயாமி; நீலாய நம: நீலம் தர்பயாமி: பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி;
வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி; சித்ராய நம: சித்ரம் தர்பயாமி;
சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி;
யம ஹர்பணம் செய்துவிட்டு தெற்கு நோக்கி நின்று கொண்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட்தரஸ்ச காலப்ரேதாதி ப்ரோத்த்த க்ருதாந்த காரி க்ருதாந்த ஏத்த் தசக்ருத் ஜபந்தி
நீல பர்வத சங்காச ருத்ர கோப ஸமுத்பவ காலதண்டதர, ஶ்ரீமன் வைவஸ்வத நமோஸ்துதே
யம தர்மராஜாவை ப்ரார்தித்து கொள்ளவும்.
இதனால் பாபங்கள் விலகும், அகால மரணம் ஏற்படாது. எல்லா வியாதியும் விலகும். யம பயம் வராது.