திருமங்கையாழ்வார்

 

Thirumangai Alzwar

 

திருமங்கையாழ்வார் !

சோழநாட்டில் திருமங்கை மன்னனாக இருந்து பின் இறைவனின் தொண்டனாகி எம்பெருமானின் அடியவர்க்காக வாழ்ந்தவர். 8வது நூற்றாண்டில் சோழவளநாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் நளவருடம், கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்தார். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் நீலன்.

இவர் எம்பெருமானின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகக் கருதப்படுகிறார். மணமக்கள் கோலத்தில் ஸ்ரீமந்நாராயணன் லட்சுமி தேவியுடன் இவருக்குக் காட்சியளித்து ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தின் பொருளுரைத்ததாக “வாடினேன் வாடிவருந்தினேன்… நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்,” என்ற பாசுரத்தின் மூலம் அறிகிறோம்.

பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்ககூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற ஆறு பிரபந்தங்களில் 1137 பாசுரங்களாக இயற்றியுள்ளார்.

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி