ஸ்ரீ சனி பகவான்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சனி தோஷம் மட்டுமல்ல; இதர கோள்களினால் ஏற்படும் கெடு பலன்களும் நீங்கி நலம் பெறலாம்.

நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச  நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச  நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக 

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே 
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே 

நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே 
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே 

நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச 
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ தேவா ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா 

த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி

ப்ரீதோஸ்மி தவராஜேந்திர ஸ்தோத்ரேணாநேந ஸம்ப்ரதி அதேயம் வாவரம் துப்யம் ப்ரீதோஹம் ப்ரததாமிச த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் :படேன் நிஹ மாநவ:  ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்யவை  ம்ருத்யுஸ்தான கதேவாபி ஜன்மஸ்தான கதேபிவா : பு மான் ஸ்ரத்தயா யுக்த: சுசி: ஸ்தாத்வா ஸமாஹிதசமீபத்ரை: சமர்ப்யர்ச்ச ப்ரதிமாம் லோஹஜாம் மம  மாஷோ தனம் தினலர் மிஸ்ரம் தத்யால்லோஹம் து தக்ஷிணாம் க்ருஷ்ணாம் காம் மஹீஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே
மதிது நேது விசேஷேண  த்திரரேணா நேநபூஜயேத்

வியாதிகள் நீங்கவும், கடன் தொல்லை ஒழியவும், துர்தேவதைகளால் ஆபத்து நீங்கவும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.

“த்வயா ஹ்ருத்வா:வாமம் வபு ராபரி திருப் தேந மநஸா 
ஸரீரார்த்தம் சம்போ ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்!
ததா ஹித் வத்ரூபம் சகல மருணாபம் த்ரிநயனநம்
குசாப்யா மாநம்ரம் குடில சசி சூடால முகுடம்!”
“ஓம் சமக்நிரக் நிபிச்கரச் சன்ன ஸ்தபது சூர்யா:
சம்வாதோ வாதவரப அபச்ரித: ஸ்வாஹா!”
என்கிற மந்திரத்தைச்  சொல்லி ஹோமம செய்தால் ஒருவருக்கு இருக்கின்ற கஷ்டங்கள் விலகும்,  கஷ்டங்கள் வராது, நன்மைகள் கூடும்.

ஸ்ரீ கருவூரார் சித்தர் ஸ்வாமிகள் 

Karuvoorar Siddhar

தியானச்செய்யுள்

கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே !
வாரி வழங்கி அருள் கொடுத்தாய் !
மாறாத சித்துடையாய் !
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக் கரங்களே காப்பு !

சோழ நாட்டில் கருவூரில் பிறந்த இந்த சித்தர் கோயில்களுக்கு விக்ரஹங்களை செய்யும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர். வாலிப வயதிலேயே ஞானியாக விளங்கினார். குருநாதர்போகர் பெருமானின் கருணையால் அம்பிகையின் அருள்பெற்று, இராசவாதவித்தையில் சிவலிங்கங்கள் செய்யலானார். காசி சென்று விஸ்வநாதர் ஆலயத்தில் தங்கமயமான லிங்கத்தை உருவாக்கினார்.

ஒருமுறை சோழ மன்னன் இரணியவர்மன் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடிய பொழுது, தண்ணீருக்குள்,நடராஜப்பெருமானின் நடனத்தையும் ஓங்கார ஒலியையும் கேட்டு வியந்து போனான். தான் கண்ட காட்சியை சிலையாக வடிக்க கைதேர்ந்த சிற்பிகளிடம் கூறினான். பல சிற்பிகள் எவ்வளவோ முயற்சித்தும் விக்கிரகத்தை வடித்துக் கொடுக்க அவர்களால் இயலவில்லை. உடனே, போகர் பெருமான் கருவூரார் சித்தருக்கு செய்தி அனுப்பினார்.

விரைந்து வந்த கருவூரார் சித்தர் 1 மணி நேரத்தில் நடராஜரை ஒளி வீசும் வடிவழகு கொண்டவராய் உருவாக்கினார். அரசன் சிலையழகில் மகிழ்ந்தாலும் சித்தர் பெருமான் செப்பு உலோகத்தை சிலையில் சேர்த்தது கண்டு சிறையில் அடைத்தான். போகர் பெருமான் அரசனிடம், அரசே, சுத்தமான தங்கத்தில் வடிவம் செய்தால், அதிலிருந்து வீசும் ஒளி நாளாக நாளாக பார்ப்பவர்களின் கண்களைப் பொசுக்கிவிடும். இந்த அறிவியல் உண்மை தெரியாத உனக்கு அந்த நடராஜர் சிலை வேண்டாம். நான் எடுத்துப்போகின்றேன். என் கருவூராரை எனக்குக் கொடு, உன்னுடைய தங்கத்தை நான் உனக்குத் தருகின்றேன் என்று கூறினார். தவறுணர்ந்த மன்னன் கருவூரார் பெருமானை விடுதலை செய்து, நடராஜர் சிலையை கண்ணீர் மல்க பக்தியுடன் போகர் ஸ்வாமியிடம் இருந்து பெற்றான், பின்னர், கருவூரார் பெருமான் நடராஜரை பிரதிஷ்டை செய்யும் பூஜை முறைகளைக் கூறி மறைந்தார்.

அதுபோன்று, மற்றொரு முறை அபரஞ்சி என்னும் பெண்ணிற்கு கருவூரார் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் அரங்கர் பெருமானின் நவரத்தின மாலையை கொடுத்தருளினார். “இது எப்படி நடக்கும் என்று விசாரணை வைத்த போது கோவில்முன்பு கூடிய ஊரார் காதுகளில்கருவூரார் சித்தர் மூலம் என் அடியவளாகிய அபரஞ்சிக்கு நான்தான் அந்த நவரத்தின மாலையைக் கொடுத்தேன்.” என்று அசரீரியாக ஒலித்தார். காளியும் கருவூரார்பெருமான் கேட்டதையெல்லாம் வழங்கி இருக்கிறாள்.

இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் கருவறையிலிருந்த பிரம்மாண்டமான லிங்கம்அஷ்டபந்தனகட்டில் நில்லாமல் ஆடிக்கொண்டே இருந்தது.

உடனே,கருவறைக்குச் சென்ற கருவூரார் சித்தர், பந்தனம் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த பிரமம ராட்சசியின் மேல் காரி உமிழ்ந்தார். பின்னர் அஷ்டபந்தனத்தில் தனது உமிழ்நீரைக் கலந்துகுழைத்து எளிதாக அஷ்டபந்தனம் செய்து,சிவலிங்கபிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.

இத்தகு பெருமை வாய்ந்த கருவூரார் சித்தரை தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள சித்தர் பீடத்தில் சனிக்கிழமையன்று துளசி, மல்லிகைப் புஷ்பம், கருநீல வஸ்திரம் சகிதமாக பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

  1. சிவனே போற்றி!
  2. சிவனைப் பூசிப்பவரே போற்றி!
  3. நாடி யோகியே போற்றி!
  4. ஒளி பொருந்தியவரே போற்றி!
  5. அவதார புருசரே போற்றி!
  6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி!
  7. லோக சேம சித்தரே போற்றி!
  8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி!
  9. யோக மூர்த்தியே போற்றி!
  10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
  11. கற்பூரப் பிரியரே போற்றி!
  12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி!
  13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி!
  14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி!
  15. கருவைக் காப்பவரே போற்றி!
  16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

 

என்று கூறிய பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீ கருவூரார் சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன் பின்பு அவருக்கு நிவேதனமாக பூ, கற்பூரம் அல்லது அதிக பச்சைக் கற்பூரம் இட்ட சர்க்கரைப் பொங்கலை வைத்து மனமுருக வேண்டி நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

இவரை வணங்குவதால் சனி தோஷம் நீங்கி நன்மை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமச்சனி , கண்டகச்சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும். வாகனவிபத்துக்கள் நீங்கும். போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்குண்டான பிரச்சினைகள் தீரும். படிப்பிலே உள்ள மந்தநிலை மாறும். எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும். பிரமம ஹஸ்தி தோஷம் அகலும், புத்திர பாக்கியம் கிட்டும், பெண்களின் பிரச்சினைகள் தீரும்.

சனிபகவான் அஷ்டோத்திரம்

  1. ஓம் சநீஸ்வராய நம :
  2. ஓம் ஸாந்தாய நம :
  3. ஓம் ஸர்வபீஷ்டப்ரதாயிநே நம :
  4. ஓம் சரண்யாய நம :
  5. ஓம் வரேண்யாய நம :
  6. ஓம் ஸர்வேஸாய நம :
  7. ஓம் ஸெளம்யாய நம :
  8. ஓம் ஸுவந்த்யாய நம :
  9. ஓம் ஸுரலோகவிஹாரிணே நம :
  10. ஓம் ஸுகாஸநோபவிஷ்டராய நம :
  11. ஓம் ஸுக்பராய நம :
  12. ஓம் கநாய நம :
  13. ஓம் கநரூபாய நம :
  14. ஓம் கநாபரண தாரிணே நம :
  15. ஓம் கநஸாரவிலேபாய நம :
  16. ஓம் ஜத்யோதாய நம :
  17. ஓம் மந்தாய நம :
  18. ஓம் மந்தசேஷ்டாய நம :
  19. ஓம் மஹநீயகுணாத்மநோம :
  20. ஓம் மந்த்யபாவனபாதாய நம :
  21. ஓம் மஹேஸாய நம :
  22. ஓம் ஸாயாபுத்ராய நம :
  23. ஓம் ஸர்வாய நம :
  24. ஓம் ஸர்தூணீரதாரியே நம :
  25. ஓம் சரஸ்திரஸ்வபாவாய நம :
  26. ஓம் சஞ்சலாய நம :
  27. ஓம் நீலவர்ணாய நம :
  28. ஓம் நித்யாய நம :
  29. ஓம் நீலாம்பரவிபூஷாய நம :
  30. ஓம் நிஸ்சலாய நம :
  31. ஓம் வேத்யாய நம :
  32. ஓம் விதிரூபாய நம :
  33. ஓம் விரோதாதாரபூமயே நம :
  34. ஓம் வைராஸ்பதஸ்பாவா நம :
  35. ஓம் வஜ்ரதேஹாய நம :
  36. ஓம் வைராக்யதாய நம :
  37. ஓம் வீராய நம :
  38. ஓம் வீதரோகபயாய நம :
  39. ஓம் விபத்பரம்ரெக்ய நம :
  40. ஓம் விஸ்வவந்தயாய நம :
  41. ஓம் க்ருத்தவாஹாய நம :
  42. ஓம் கூர்பாய நம :
  43. ஓம் குரூபிணே நம :
  44. ஓம் குதஸிதாய நம :
  45. ஓம் குணாட்யாய நம :
  46. ஓம் கோசாராய நம :
  47. ஓம் அவித்யா மூயியாஸாய நம :
  48. ஓம் வித்யாவிதயாஸவரூபிணே நம :
  49. ஓம் ஆயுஷ்யகாரணயாய நம :
  50. ஓம் ஆபதுத்தநதே நம :
  51. ஓம் விஷ்ணுபக்தாய நம :
  52. ஓம் வஸிஸே நம :
  53. ஓம் விவிதாகமவேதிநே நம :
  54. ஓம் விதிஸ்துதயாய நம :
  55. ஓம் வந்த்யாய நம :
  56. ஓம் விரூபாக்ஷhய நம :
  57. ஓம் நீலாஞ்சனவிபாய நம :
  58. ஓம் சரிஷ்டாய நம :
  59. ஓம் வஜ்ராங்குஸகராய நம :
  60. ஓம் வரதாய நம :
  61. ஓம் அபயஹஸ்தாய நம :
  62. ஓம் வாமநாய நம :
  63. ஓம் ஜேஷ்டாபத்நீஸமேதராய ஸ்ரேஷ்டாய நம :
  64. ஓம் அமிதபாபிஷேண நம :
  65. ஓம் கஷ்டௌகநாஸகாய நம :
  66. ஓம் ஆர்யபுஷ்டிதாய நம :
  67. ஓம் ஸ்துத்யநய நம :
  68. ஓம் ஸ்தோ த்ர கமயாய நம :
  69. ஓம் பக்கிவஸ்யாய நம :
  70. ஓம் பாநவே நம :
  71. ஓம் பாநுபுத்ராய நம :
  72. ஓம் பாவநாய நம :
  73. ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்தாய நம :
  74. ஓம் தந்தாய நம :
  75. ஓம் தநுஷ்மதே நம :
  76. ஓம் தநுப்ரகாஸதேஹாய நம :
  77. ஓம் தாமஸாய நம :
  78. ஓம் அஸேஷஜனவந்யாய நம :
  79. ஓம் அஸேஷபலதாயினே நம :
  80. ஓம் வஸீக்ருதஜநேஸாய நம :
  81. ஓம் பஸுக்ருதஜநேஸாய நம :
  82. ஓம் வரிஷ்டாய நம :
  83. ஓம் கேசராய நம :
  84. ஓம் ககேஸாய நம :
  85. ஓம் புவநீலாம்பராய நம :
  86. ஓம் காடிந்யமாநஸாய நம :
  87. ஓம் ஆர்யகணஸ்துத்யாய நம :
  88. ஓம் நீலச்சத்ராய நம :
  89. ஓம் நிதயாய நம :
  90. ஓம் நிர்குணாய நம :
  91. ஓம் குணாத்மநே நம :
  92. ஓம் நிராமயாய நம :
  93. ஓம் நிந்த்யாய நம :
  94. ஓம் வந்த்நீயாய நம :
  95. ஓம் தீராய நம :
  96. ஓம் திவ்யதே ஹாய நம :
  97. ஓம் தீநார் திஹரணாய நம :
  98. ஓம் தைந்யநாஸகராய நம :
  99. ஓம் ஆர்யஐந்கண்யாய நம :
  100. ஓம் கரூராய நம :
  101. ஓம் காமக்ரோ தகராய நம :
  102. ஓம் களத்புத்ரஸத்ருவகாணாய நம :
  103. ஓம் பரிஸோஷிதபக்தாய நம :
  104. ஓம் பரபீதிஹரயா நம :
  105. ஓம் பக்தஸங்கமநோபீஷ்டபந்தாய நம :
  106. ஓம் ஸ்ரீமத்சநீஸவராய நம :
  107. நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயமாமி

 

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி