ஸ்ரீ அகத்தியர்

 

Agathesar

அகஸ்தியர்

(ஞானம்உண்டாக)

ஓம்அகஸ்தீஸ்வராயவித்மஹே
பொதிகைசஞ்சராயதீமஹி
தன்னோஞானகுருப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அங்கார துர் விமோட்சனம் சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் சற்குருவே ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம

ஐந்திலக்கணம்தந்தஅகத்தியரே
சித்தவேட்கைகொண்டசிவயோகியே
கடலுண்டகாருண்யரே
கும்பமுனிகுருவேசரணம்சரணம்

அருள்வடிவான அகத்திய மாமுனியை 
 ஆனந்த சோதியான மரகத கொழுந்தினை 
 நயம்பட வாக்கீந்து மருதேரி தொற்றுவித்தானை   
 நன்நீர் நூபரகங்கை நல்கிய நிதியானை  
சன்மார்க்கம்  தழைக்க அருள்நிலையத்தில் நிறைந்தானை 
 சித்தர்நெறி  இங்குபரப்பும் சித்தம் கொண்டானை 
 சோதி பிழம்பான பரம்பொருள் அம்சமதாய் 
 அகண்டசோதியில் இனி போற்றுவோம் வம்சமாதாய் 


அகண்டம்  அதில்  பிருகுவின் அம்சமுடன் 
அருள்வாய் அய்யனே  இனியுன் வம்சமுடன் 
நல்தலம் மருதேரியில் செய்உயர்  மருந்தாய் 
ஆரோகியம் தரும் அத்தன் வடிவாய் 
நிறையான  குணம் அருளும் கும்பமுனியாய் 
குவலயத்தில் நல்லோர் வேண்டும்  நன்னிதியாய் 
பூரணமான ஆசிகள் தந்துநற் கதி காட்டி 
பல்லோரும் ஏற்றும் மலர்பதமே போற்றி 

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை 
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர் 
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை 
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம் 
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும் 
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்

குருவடி பொற் தாழ் சரணம் சரணம் 
கும்பமுனியே சரணம் சரணம் 
திருவடி நாதா சரணம் சரணம் 
சித்தர்கள் அருளே சரணம் சரணம் 
அருள்வடிவு ஆனாய் சரணம் சரணம் 
அமரர்கள் கோவே சரணம் சரணம் 
பொருள் அடி மூலம் காட்டிற்று 
போதித்த குருவே சரணம் சரணம் 

உச்சிஷ்ட கணபதயே நமஹ;

ஓம் அகத்தீசாய நமஹ:

ஓம் சத்குருவே போற்றி

ஓம் குறுமுனியே போற்றி

ஓம் அகத்தீசா போற்றி

ஓம் ஒளிரூபமே போற்றி

ஓம் விபூதி பிரியரே போற்றி

ஓம் பொதிகை வேந்தே போற்றி

ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் அருள் செய்பவரே போற்றி

ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி

ஓம் தீபச்சுடரே போற்றி

ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ

ஓம் குறுவடி மகனே போற்றி

ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி

ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி

ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி

ஓம் கமண்டலதாரியே போற்றி

ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி

ஓம் செந்தமிழ் முனியே போற்றி

ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி

ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி

ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி

ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி

ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி

ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி

ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி

ஓம் ஞான ரூபமே போற்றி

ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி

ஓம் சருவாந்தர் யாமியே போற்றி

ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி

ஓம் தத்துவமானவரே போற்றி

ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி

ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி

ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி

ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி

ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி

ஓம் மாசற்ற மணியே போற்றி

ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி

ஓம் நற்கதி அருள்வாய் போற்றி

ஓம் நறுமண விரும்பியே போற்றி

ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி

ஓம் இனிமையுடையோய் போற்றி

ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி

ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி

ஓம் தருமத்தின்  வடிவே போற்றி

ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி

ஓம் கும்ப வடிவானவனே போற்றி

ஓம் நீதி வழங்குபவனே போற்றி

ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி

ஓம் புகழுருவே போற்றி

ஓம் புலமைக்கு வித்தே போற்றி

ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி

ஓம் பரமானந்தமே போற்றி

ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி

ஓம் கரை கண்டோரே போற்றி

ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி

ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி

ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி

ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி

ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி

ஓம நீதி வழி நிற்போரே போற்றி

ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி

ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி

ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி

ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி

ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி

ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி

ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி

ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி

ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி

ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி

ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி

ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி

ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி

ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி

ஓம் வல்லமை படைத்தவரே போற்றி

ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி

ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி

ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி

ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி

ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி

ஓம் வித்தையின் கடலே போற்றி

ஓம் காட்சிக்கினியோய் போற்றி

ஓம் கரும்பின் சுவையே போற்றி

ஓம் நற்சுகம் தருவோய் போற்றி

ஓம் சிற்சபை கண்டோய் போற்றி

ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி

ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி

ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி

ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி

ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி

ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி

ஓம் மருத்துவ மாமணியே போற்றி

ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி

ஓம் பரிவு காட்டுபவரே போற்றி

ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி

ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி

ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி

ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி

ஓம் மகிமையை அருள்வோய் போற்றி

ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி

ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி

ஒம் எல்லையில்லா கருணையே போற்றி

ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி

ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி

ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி

ஓம் அல்லல் அறுப்போய் போற்றி

ஓம் அருட்பெருந்தீயே போற்றி

ஓம் அமுதே ஆனாய் போற்றி

ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி

ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி

ஓம் நித்யமடைந்தாய் போற்றி

 

 

 

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி