ஸ்ரீ கேது பகவான்

ஓம் ஞானப்பிரசுனாம்பிகை போற்றி 

ஓம் காளத்தீஸ்வரர் போற்றி

நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே சூல அஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்.

 ஓம் கேதுக்ரஹாய வித்மஹே மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத் –

 ஓம் விக்ருத்தானநாய வித்மஹே ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத் –

 ஓம் தமோக்ரஹாய வித்மஹே த்வஜஸ்திதாய தீமஹி
தன்னஹ் கேதுஹ் ப்ரசோதயாத் –

கேதுத் தேவே கீர்த்தித் திருவே  பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி

பலாச புஷ்ப ஸங்காசம்  தாரகாக்கரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்  தம்கேதும் ப்ரணமாம் யஹம்:

ஸ்ரீ சட்டை முனி ஸ்வாமி

ஸ்ரீ சட்டைமுனி

சித்த வேட்கை கொண்டு சிவனுடன் கலந்த சிங்களச்சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற
அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

பதினாறு போற்றிகள்

  1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!
  2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!
  3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!
  4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!
  5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!
  6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!
  7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!
  8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!
  9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!
  10. நோய்களை அழிப்பவரே போற்றி!
  11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!
  12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!
  13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!
  14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
  15. ராமநாமப் பிரியரே போற்றி!
  16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சித்த பின்பு, பின்வரும் மூலமந்திரத்தை ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றிஎன்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

ஸ்ரீ குதம்பைச் சித்தர் தியானச்செய்யுள்

ஸ்ரீ குதம்பைச் சித்தர்

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே  அத்திமரம் அமர்ந்து  ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே  கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே! 

இந்தச் சித்தரை வணங்குவதால் கேது மகாதசை என்று நம் ஜாதகத்தில் வருகின்ற ஒரு காலகட்டத்தில் ஏழு வருடங்கள் இவரின் தசை நடக்கும்பொழுது, 80 சதம் எந்த மனிதனும் துன்பப்படுகின்ற அமைப்பை உடையவனாக இருப்பான். அப்பொழுது இவரை வணங்குவதால் கேதுவால் வருகின்ற தீமைகளை நாம் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம்.

சித்தர் வரலாறு:
யாதவ குலத்தில் அவதரித்த இந்தப்பெருமான் ஆண்குழந்தையாகப் பிறப்பினும், பெண் குழந்தை போன்று, பேரழகுடன் விளங்கியதால், நம் சித்தரின் தாய் இவருக்கு காதுகளில் குதம்பை என்ற காதணியை இட்டு நித்தமும் அது சித்தரின் காதுகளில் அசைந்தாடும் அழகைக் கண்டு
அசந்து போவார்களாம்.

சித்தருக்கு பதினாறு வயது ஆகும் தருவாயில், திடீரென்று ஒரு மகான் குதம்பை பெருமான் முன் வந்து நின்றார். வந்தவரை வணங்கி வாய் பொத்தி நின்றார். குதம்பைச்சித்தர்.

அருபெரும் உபதேசங்களை மகானிடமிருந்து பெற்ற நம் சித்தர்என்ன கைமாறு செய்வேன்என்று உருகி இருக்கின்றார். அதற்கு மகான் முற்பிறவியில் உன் தவம் கைகூடுவதற்கு முன்பு கால தேவனிடம் நீ சென்று விட்டாய். அந்தத் தவத்திற்கு உண்டான பயனைத்தான் இப்பொழுது தந்திருக்கின்றேன் என்று கூறினார்.தான்பெற்ற இறை உபதேசத்தை அனுபவத்தில் கண்டுவர யாரிடமும் சொல்லாமல் நடுநிசியில் ஒரு நாள் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு காட்டிற்குச் சென்றார்.

ஒரு அத்தி மரப் பொந்திலே அமர்ந்து தன் அனுபவங்களை எல்லாம், அமரத்துவம் பெற்ற பாடல்களாய் புனைந்தார். கிடைத்ததற்கரிய இந்த இறைசக்தியை பெற்ற பாடல்கள் இன்றும் மங்காப் புகழோடு மணக்கின்றது. இவரது தத்துவப்பாடல்கள் பாமரர்களாலும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி உள்ளது. இவர் சித்தி அடைந்த திருத்தலம் மயிலாடுதுறை ஆகும்.

பதினாறு போற்றிகள்

  1. சிவனை பூசிப்பவரே போற்றி!
  2. ஹடயோகப் பிரியரே போற்றி!
  3. சூலாயுதம் உடையவரே போற்றி!
  4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
  5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
  6. ஜோதி சொரூபரே போற்றி!
  7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
  8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
  9. நாட்டியப்பிரியரே போற்றி!
  10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
  11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
  12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
  13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
  14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே
  15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
  16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி!

 

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, பின்வரும் மூல மந்திரத்தைஓம் ஸ்ரீ குதம்பைச் சித்தரே போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.

அதன்பின்பு நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின்னர் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும்.நிறைவாக தீபாராதனை காட்டவும்.

நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிக்கும் குதம்பைச்சித்தரை மனப்பூர்வமாக வணங்குவதால், சித்தபிரமை கோளாறு, மனவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை அகலும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.சரியாகப் படித்தாலும் தேர்வெழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.

மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண்பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.கேதுபகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கி திருமணம் நாள் முறையில் நடக்கும். போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.ஆன்மீகப்பாதையில் உள்ள முன்னேற்றத்தடை அகலும்.

  1. ஓம் கேதுவே நம :
  2. ஓம் ஸ்தூலஸிரஸே நம :
  3. ஓம் ஸிரோமாத்ரே நம :
  4. ஓம் த்வஜாக்ருத்ரே நம :
  5. ஓம் கேதுக்ரஹாய நம :
  6. ஓம் ஸிம்ஹக்ருதஸம் பூதாய நம :
  7. ஓம் மஹாபீதகராய நம :
  8. ஓம் சித்ரவர்ணாய நம :
  9. ஓம் பிங்களாக்ஷhய நம :
  10. ஓம் பலதூம்ரஸங்கர் தூய நம :
  11. ஓம் மஹோரகாய நம :
  12. ஓம் ரத்தலோசநாய நம :
  13. ஓம் சித்ரககாரிணே நம :
  14. ஓம் மஹாஸுராய நம :
  15. ஓம் ஸிகிழோ தநாய நம :
  16. ஓம் ஸுச்ரமித்ராய நம :
  17. ஓம் மந்தகாஸாய நம :
  18. ஓம் அந்தர்வே தீஸ்வராய நம :
  19. ஓம் ஜைமிநிகோத்ரஜாய நம :
  20. ஓம் சித்ரகுப்தாத்மனோ நம :
  21. ஓம் தக்ஷிணாபிமுகார நம :
  22. ஓம் தவநவர்ணாய நம :
  23. ஓம் கோராய நம :
  24. ஓம் முகுந்ஸதவரந்தாய நம :
  25. ஓம் மஹாஸுரகு லோத்பவாய நம :
  26. ஓம் ஸங்கதேவதாய நம :
  27. ஓம் ஸிகிநே நம :
  28. ஓம் தீவ்ரகோபாய நம :
  29. ஓம் க்ரோதநிதயே நம :
  30. ஓம் பாபகண்டகாய நம :
  31. ஓம் தீக்ஷணதம்ட்ராய நம :
  32. ஓம் சாயாக்ரஹாய நம :
  33. ஓம் அந்தியக்ரஹாய நம :
  34. ஓம் மஹாஸீர்ஷாய நம :
  35. ஓம் ஸூர்யாரயே நம :
  36. ஓம் புஷ்பவத்ஸ்வரிணே நம :
  37. ஓம் வைரதஹதாய நம :
  38. ஓம் சித்ரஸுப்ரதாய நம :
  39. ஓம் சித்ரதாய நம :
  40. ஓம் சித்ரதவஜபதாய நம :
  41. ஓம் குறாததபக்ஷராய நம :
  42. ஓம் துரீயநேஸுகப்ரதாய நம :
  43. ஓம் த்ருதீயேவைரதாய நம :
  44. ஓம் பாயக்ரஹாய நம :
  45. ஓம் ஸ்போடகாரணாய நம :
  46. ஓம் ப்ராணநாதாய நம :
  47. ஓம் பஞ்சவேஸ்ரமகராய நம :
  48. ஓம் த்விதீயேஸ்புடவத்ப்ரதாய நம :
  49. ஓம் விஷாகுசீதவக்த்ராய நம :
  50. ஓம் காமரூபிணே நம :
  51. ஓம் சதுர்தேமாத்ருநாஸாய நம :
  52. ஓம் நமவேபித்ருநாஸாய நம :
  53. ஓம் பக்தவதஸலாய நம :
  54. ஓம் ஸிமஹதந்தாய நம :
  55. ஓம் ஸத்ய அநருதவாக்தாத்நம :
  56. ஓம் ஸுதேதநதபந்தகாய நம :
  57. ஓம் ஸர்வாக்ஷிஜாதாய நம :
  58. ஓம் கர்மராஸ்புகவாய நம :
  59. ஓம் உபாப்தேகீர்த்திதாய நம :
  60. ஓம் ஸப்ததமகஹப்ரதாய நம :
  61. ஓம் ஊர்தவமூர்த்தஜாய நம :
  62. ஓம் அநங்காய நம :
  63. ஓம் உத்பாதரூபதராய நம :
  64. ஓம் ம்ருந்புத்ராய நம :
  65. ஓம் காலாகரஸந்நிபாய நம :
  66. ஓம் நரபீடகரய நம :
  67. ஓம் ஸாவோபத்ரவகாரகாய நம :
  68. ஓம் வ்யாதிநாஸகராய நம :
  69. ஓம் அநவரய நம :
  70. ஓம் க்ரஹ்ணகாரிணே நம :
  71. ஓம் சிதம்ரஸூதமாப்லாய நம :
  72. ஓம் அதருஸ்யாய நம :
  73. ஓம் அபஸவ்யம்ரசாரிணே நம :
  74. ஓம் நவமேபாபதாய நம :
  75. ஓம் உபராகஸுகோசாய நம :
  76. ஓம் பஞ்சமேஸோகதாய நம :
  77. ஓம் புருஷர்மணே நம :
  78. ஓம் அஷ்டமேலயாதிகர்த்ரே நம :
  79. ஓம் தநேபஹுஹுகப்ரதாய நம :
  80. ஓம் ஜாநேரோகதாய நம :
  81. ஓம் க்ருஹோத்தம்ஸராய நம :
  82. ஓம் அஸேஷ்ஜநபூஜிதாய நம :
  83. ஓம் பாவத்ருஷ்டயே நம :
  84. ஓம் கேசராய நம :
  85. ஓம் ஸாம்பவாய நம :
  86. ஓம் நடாய நம :
  87. ஓம் ஸாஸ்வதாய நம :
  88. ஓம் ஸுபாஸுபபலப்ரதாய நம :
  89. ஓம் ஸுதர்பாயிநே நம :
  90. ஓம் தூம்ராய நம :
  91. ஓம் ஸிம்ஹாஸராய நம :
  92. ஓம் ரவீந்துத்யுதிஸமநாய நம :
  93. ஓம் அஜிகாய நம :
  94. ஓம் வைசித்ரகபோலஸ்யந்தகாய நம :
  95. ஓம் பக்தவதஸலாய நம :
  96. ஓம் பக்தரக்ஷநய நம :
  97. ஓம் பக்தாபீஷ்டபலப்ரதாய நம :
  98. ஓம் கேதுமூர்த்தயே நம :

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி