ஸ்ரீ ராகு பகவான்

ஓம் கிரிகுஜாம்பிகை போற்றி ஓம் நாகநாதர் போற்றி
ஓம் ஞானப்பிரசுனாம்பிகை போற்றி ஓம் காளத்தீஸ்வரர் போற்றி

ஓம் சிரரூபாய வித்மஹே அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நீலவர்ணாய வித்மஹே சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் பைடினசாய வித்மஹே சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர் நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.

தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி

அரவெனும் ராகு அய்யனே போற்றி கரவாது அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்றி

ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் (ஸ்ரீ மருதமலை சித்தர்

pambati siddar

தியானச் செய்யுள்

அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து! பின் உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரேஆதிசேஷனின் அருள்கண்டு ஆதிசிவனின் மகன் வரம்கொண்டு ஜாதி மதங்கள் பேதம் இன்றி காக்கும் சித்தரே! காக்க! காக்க!

பாம்பாட்டிச் சித்தர் ஜோகி எனும் வகுப்பில் பிறந்தவர். இளம் வயதிலேயே பாம்பை பிடித்து படமெடுத்து ஆடச்செய்வது, அவைகளின் விஷத்தை சேமித்து விற்பதும், விஷமுறிவு மூலிகைகளை காடுகளில் கண்டெடுப்பதுமாய் இருந்தார். பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். மருதமலையில் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் ஒன்றும் துவங்கினார்.

அப்பொழுது வைத்தியர் சிலர், பாம்பாட்டிச் சித்தரிடம் காட்டில் நவரத்தின பாம்பு ஓன்று வசிப்பதாகவும், அது பெருத்த விலை போகும் என்றும், மேலும் அது இறை தேட இரவில் மட்டுமே வெளியில் வருவதாகவும் கூறினார்.

இதனைக் கேள்விப்பட்டவுடன் பாம்பாட்டிச்சித்தர், எப்படியாவது அந்த நவரத்தினப் பாம்பை பிடித்து விடுவது என்று முடிவு செய்தார். அதன்படி, அவர் நவரத்தினப் பாம்பை பிடிக்கின்ற தருவாயில் அனைத்து பாம்புகளும் புற்றிலே மறைந்து கொண்டன. அதைக் கண்டு பாம்பாட்டிச் சித்தர்பாம்புகள் அனைத்தும் காட்டிக் காலி செய்துவிட்டனவோஎன்று எண்ணி கொண்டிருக்கும் நேரத்தில், பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கு மிகவும் பிரகாசமான ஒளியுடன் சட்டை முனி சித்தர் தோன்றினார். இங்கு எதை தேடுகிராய்? என வினவினார். அதற்கு பாம்பாட்டியார்நான் நவரத்ன பாம்பை பிடிக்கவந்தேன், அதை காணவில்லைஎன்று தெரிவித்தார் .

இதைகேட்ட சட்டை முனி சிரித்தார். “நவரத்தின பாம்பை உனக்குள் நீயே வைத்துகொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்றசெயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தை தர கூடிய ஒரு பாம்பு அனைவர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. எனவே வெளியே திரியும் இந்தபாம்பை தேடுவதை விட்டு விட்டு, இல்லாத பாம்பைதேடி ஓடாதேஎன்று கூறினார் .இவை அனைத்தையும் கேட்டு உண்மையினை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

சட்டைமுனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியாரை பார்த்து விளக்கம் தர தொடங்கினர். அற்புதம் வாய்ந்த இந்தமனித உடலினுள் ஆதியிலிருந்தே குண்டலினி என்ற ஒருபாம்பு படுத்துகொண்டு இருக்கிறது. தூங்கி கொண்டு இருக்கும் அந்தபாம்பு அறிவை குறைக்கின்றது . இதன் நுட்பத்தை அறிந்துகொள்வது அரிது. மக்களின் துன்பத்துக்கு மூலாகாரணமே இந்த மூலாதார பாம்பின் உறக்கம்தான்.

இறைவனை உணர பாடு படுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது குண்டலினி என்ற அந்தபாம்பு விழித்தேழும். எனவே தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனை காணும் இரகசியம் இதுவே என கூறி முடித்தார்.

குருதேவா! அரும் பெரும் இரகசி யத்தை உங்களால் இன்று தெரிந்துகொண்டேன் . மேலான இந்தவழியை விட்டு இனிநான் விலக மாட்டேன்!” என சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார்.

ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தரை வணங்குவதால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு உண்டாகும். நிழல் நிஜமாகவும், நிஜம் நிழல் போன்றும் நிலை மாறும். கணவன் மனைவியிடையே உள்ள தாம்பத்திய பிரச்சினைகள் அகலும். போதைப்பொருட்கள், புகைபிடித்தல் போன்ற தீயபழக்கங்கள் அகலும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப்பயணங்கள் உண்டாகும். ஜாதகத்திலே ராகு பகவானால் ஏற்படக்கூடிய கலஸ்திர தோஷம் நீங்கி நல்ல இடத்திலே திருமணம் நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் பெருகும். வீண் பயம் அகன்று மன பலம் கூடும். பொதுவாக ராகுவைகரும்பாம்புஎன்று சித்தர்கள் வருணிக்கப்படுகின்றார். அவரை சனி அன்று 9-10 ½ ராகுகாலத்திலே, நீல நிற வஸ்திரம், அல்லி,தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய புஷ்பங்களால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்யவேண்டும்.

பதினாறு போற்றிகள்

  1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி!
  2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி!
  3. சர்ப்பரட்சகரே போற்றி!
  4. முருகனின் பிரியரே போற்றி!
  5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி!
  6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி!
  7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி!
  8. ஸ்ரீ ஆதிசேஷனை வணங்குபவரே போற்றி!
  9. விஷத்தினை முறிப்பவரே போற்றி!
  10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி!
  11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி!
  12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
  13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
  14. சிவனுக்கு ஆபரணமாக இருப்பவரே போற்றி!
  15. நந்திதேவரின் நண்பரே போற்றி!
  16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு, சித்தரின் மூல மந்திரமானஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே போற்றி போற்றிஎன்ற இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை சொல்லிவர வேண்டும், பின்பு நிவேதனமாக சர்க்கரை சேர்க்காத பச்சைப் பாலையும், வாழைப் பழங்களையும் வைக்க வேண்டும்.

இராகு அஷ்டோத்திரம்

  1. ஓம் ராஹுவே நம :
  2. ஓம் ஸிம்ஹிகேயா நம :
  3. ஓம் விதுநதாய நம :
  4. ஓம் ஸுரஸதரவே நம :
  5. ஓம் தமஸே நம :
  6. ஓம் ஜந்மநிஹாநி தாய நம :
  7. ஓம் சதுர்தேமாதருநாசகாய நம :
  8. ஓம் புஜகேஸாய நம :
  9. ஓம் அர்தஸரீராய நம :
  10. ஓம் விஸீத்பாலாவ்ருதாய நம :
  11. ஓம் ப்ரணயே நம :
  12. ஓம் கார்க்யாஸநாய நம :
  13. ஓம் ஸுராகவே நம :
  14. ஓம் சதுர்புஜாய நம :
  15. ஓம் ஜீமுதஸங்கமலகாயாநநீய நம :
  16. ஓம் கட்ககேட்கதாரிணே நம :
  17. ஓம் வரதஹஸ்தாய நம :
  18. ஓம் ஸூலாரிதாய நம :
  19. ஓம் மேகவர்ணாய நம :
  20. ஓம் க்ருக்ஷ்ணத்வஜபதாகிநே நம :
  21. ஓம் தக்ஷிணாயிமுகரதயா நம :
  22. ஓம் தீக்ஷ்ணதம்ஷட்ரகநாய நம :
  23. ஓம் ஸுபாகாராநநஸ்தாய நம :
  24. ஓம் கோமேதாபரணப்ரியாய நம :
  25. ஓம் கோமேதாபரணப்ருயாய நம :
  26. ஓம் மாஷ்ப்ரியாய நம :
  27. ஓம் காஸ்யாபநந்தநாய நம :
  28. ஓம் உல்காபாதமித்ரோ நம :
  29. ஓம் ஸூலநித்யாய நம :
  30. ஓம் க்ருணாஸர்பஸ்வரூபாய நம :
  31. ஓம் சதுர்தேவைர தாயகாய நம :
  32. ஓம் ஷஷடேவித்தாத்ரே நம :
  33. ஓம் நவமேபாகதாத்ரே நம :
  34. ஓம் தசமேஸோக்தாயகாய நம :
  35. ஓம் ஆயேயஸப்தோத்ரோ நம :
  36. ஓம் அந்தேவைரப்தாயிநே நம :
  37. ஓம் காலாத்மாந நம :
  38. ஓம் அகேபசராய நம :
  39. ஓம் தந்யே ஆஸ்யககுத்ப்ரதாய :
  40. ஓம் காயநம :
  41. ஓம் பஞ்சமத்ருணாஸ்ரும்ஸதாய நம :
  42. ஓம் ரவீந்துபிகாராய நம :
  43. ஓம் சாயாஸ்வரூபிணே நம :
  44. ஓம் விஷட்சக்ரகேதியாய நம :
  45. ஓம் கராளாஸ்யா நம :
  46. ஓம் க்ரூரகர்மகராய நம :
  47. ஓம் தமோரூபாய நம :
  48. ஓம் ஜாடவாப்ரதய நம :
  49. ஓம் ஸயாமாத்மநே நம :
  50. ஓம் பீஷணக்ருதே நம :
  51. ஓம் கிரீடிநேச நம :
  52. ஓம் நீலசந்தநரோஹிதாய நம :
  53. ஓம் நீலாம்பரதராய நம :
  54. ஓம் நிஸாமந்தவர்த்மநே நம :
  55. ஓம் சண்டாலவர்ணாய நம :
  56. ஓம் அஸ்விநீதார கேரத்பவாய நம :
  57. ஓம் மேஷராஸ்யுத்பாவ நம :
  58. ஓம் ஸநிவத்பலதாயகாய நம :
  59. ஓம் ஸுலாய நம :
  60. ஓம் அபஸ்வ்யக்ததேய நம :
  61. ஓம் நவமேபித்ரு சகாய நம :
  62. ஓம் பஞ்சமேஸோககாய நம :
  63. ஓம் த்யுநேகளத்ரா ஹந்த்ரே நம :
  64. ஓம் ஸப்தமேகலஹப்ரதாய நம :
  65. ஓம் உபாராகராய நம :
  66. ஓம் ஸுர்யதுச் சனவிஹராகாய நம :
  67. ஓம் நீலபுஷ்பலிகாரகாய நம :
  68. ஓம் க்ரஹஸ்ரேஷ்டாய நம :
  69. ஓம் ரஹாமஅஷ்டமக்ய நம :
  70. ஓம் சுபந்தமாத்ரே நம :
  71. ஓம் பாதுடா நகுலோத்பவாய நம :
  72. ஓம் கோவிந்தவரப்ரதாய நம :
  73. ஓம் தேவுஜாதிப்ர
  74. ஓம் விஸ்டகாய நம :
  75. ஓம் மஹாஸெளக்யப்ரதாயிநே நம :
  76. ஓம் ஸவர்பாகவே நம :
  77. ஓம் சந்தரிவைரிணே நம :
  78. ஓம் ஸுரஸதரவே நம :
  79. ஓம் பாபக்ரஹாய நம :
  80. ஓம் ஸாம்பவாய நம :
  81. ஓம் பூஜ்யாய நம :
  82. ஓம் ராடீகபூரணாதாய நம :
  83. ஓம் ஸ்படிந்யஸகுலோத்வபாய நம :
  84. ஓம் பலிநே நம :
  85. ஓம் ஸாஸ்வதாய நம :
  86. ஓம் ஸாவாபீஷ்டபலம்ரதாய நம :
  87. ஓம் பக்தரக்ஷகாய நம :
  88. ஓம் ஸ்ரீராஹுமுர்த்தயே நம :
  89. ஓம் க்ரூரநய நம :
  90. ஓம் கோராய நம :
  91. ஓம் கநிமிந்ராய நம :
  92. ஓம் சுக்ரமிதராய நம :
  93. ஓம் மகோசராய நம :
  94. ஓம் கங்காஸ்நாநத்ரே நம :
  95. ஓம் ஸ்வக்ரஹேபூபலாட்யா நம :
  96. ஓம் ஸருக்ருஹே அந்யத்பலத் ருதே நம :
  97. ஓம் சந்தரயுத்தேசண்டாளஜ நம :
  98. ஓம் நூசகாய நம :
  99. ஓம் ஜந்மஸிம்ஹே நம :
  100. ஓம் ராஜ்யலாத்ரே நம :
  101. ஓம் மந்தகாகஜாப்ரதாய நம :
  102. ஓம் ஜந்மகந்யாராஜ்யதாத்தா நம
  103. நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி