அஷ்டதிக் பாலகர்கள்
************************
அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.
இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது.
1.இந்திரன்
இந்திரன் – யுபாசிப்பதால் மக்கள் ஐச்வர்யத்தையும் ஸூகத்தையும் பெறுகின்றனர்.
ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம்
ஸகஸ்ர நயநம் ஸக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்
2.அக்னி
அக்நி- யுபாசித்து ஒளி மிக்க திருமேனியைப் பெறுவதோடு, நற்பயன்களையும் அடையலாம்.
ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டலும்
ஜ்வாலாமாலாகுலம் ரக்தம் ஸக்திஹஸ்தம் சகாஸநம்
3.எமன்
எமன் -யுபாசிப்பதால் தீவினைப் பயனை அகற்றி, நல்வினைப் பயனைப் பெற்று விளங்கலாம். இவன் தர்மத்தின் வடிவினன்.
க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்
4.நிருதி
நிருதி- யிபாசிப்பதால் பகைவர்கள் பயம் விலகும்.
ரக்தநேத்ரம் ஸவாரூடம் நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணபாணி மாஸ்ரௌகம் பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்
5.வருணன்
வருணன் – மழையைப் பொழிந்து பயிர்களை வளரச் செய்து மக்களுக்குக் களிப்பை உண்டுபண்ணி ஸூகத்தைக் கொடுப்பவன்.
நாகபாஸதரம் ஹ்ருஷ்டம் ரக்தௌகத்யுதி விக்ரஹம்
ஸஸாங்க தவளம் த்யாயேத் வருணம் மகராஸநம்.
6.வாயு
வாயு- வடிவமற்றவன். மக்களுடைய ப்ராணணுக்கு ஆதாரமாயுள்ளவன். இவனை உபாசிப்பதால் நீண்ட ஆயுளையும், பலத்தையும் பெறலாம்.
ஆபீதம் ஹரிதச்சாயம் விலோலத்வஜ தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம் ஹரிணஸ்தம் ஸமீரணம்.
7.குபேரன்
குபேரன் மக்களுக்கு ஸூகத்தைக் கொடுத்து ஸம்பத்தையும் செல்வத்தையும் வளரச் செய்பவன்.
குபேரம் மநுஜாஸீநம் ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத்
8.ஈசானன்
ஈசாநன் – மங்கள வடிவினன். இவன் மக்களுக்கு அறிவை வளரச் செய்து ஞானத்தைப் பெருக்கி விடுதலையைக் கொடுப்பவன்.
ஈஸாநம் வ்ருஷபாரூடம் த்ரிஸூலம் வ்யாலதாரிணம்
சரச்சந்த்ர ஸமாகாரம் த்ரிநேத்ரம் நீலகண்டகம்.