ஈசனே சிவகாமிநேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே உனது தி்ருவடிகளே சரணம்.
- ஓம் நடராஜனே போற்றி
- ஓம் நடனகாந்தனே போற்றி
- ஓம் அழகனே போற்றி
- ஓம் அபயகரனே போற்றி
- ஓம் அகத்தாடுபவனே போற்றி
- ஓம் அஜபா நடனனே போற்றி
- ஓம் அம்பல வாணனே போற்றி
- ஓம் அம்ச பாத நடனனே போற்றி
- ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
- ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி
- ஓம் அருள் தாண்டவனே போற்றி
- ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
- ஓம் ஆடலரசனே போற்றி
- ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி
- ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
- ஓம் ஆடியடக்குபவனே போற்றி
- ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
- ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி
- ஓம் இசையரசனே போற்றி
- ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி
- ஓம் ஈரெண் கரனே போற்றி
- ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
- ஓம் உடுக்கையனே போற்றி
- ஓம் உன்மத்த நடனனே போற்றி
- ஓம் உண்மைப் பொருளே போற்றி
- ஓம் உமாதாண்டவனே போற்றி
- ஓம் ஊழித் தாண்டவனே போற்றி
- ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி
- ஓம் கலையரசனே போற்றி
- ஓம் கங்காதரனே போற்றி
- ஓம் கமல நடனனே போற்றி
- ஓம் கனக சபையனே போற்றி
- ஓம் கருணாமூர்த்தியே போற்றி
- ஓம் கங்கை அணிந்தவா போற்றி
- ஓம் கால்மாறியாடியவனே போற்றி
- ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி
- ஓம் கிங்கிணி பாதனே போற்றி
- ஓம் குக்குட நடனனே போற்றி
- ஓம் கூத்தனே போற்றி
- ஓம் கூழ் ஏற்றவனே போற்றி
- ஓம் கவுரி தாண்டவனே போற்றி
- ஓம் கவுமாரப் பிரியனே போற்றி
- ஓம் சடை முடியனே போற்றி
- ஓம் சத்ரு நாசகனே போற்றி
- ஓம் சமர்த்தனே போற்றி
- ஓம் சதுர தாண்டவனே போற்றி
- ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
- ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
- ஓம் சித் சபையனே போற்றி
- ஓம் சிவசக்தி ரூபனே போற்றி
- ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
- ஓம் சுந்தர தாண்டவனே போற்றி
- ஓம் சூலதாரியே போற்றி
- ஓம் சூழ்ஒளியனே போற்றி
- ஓம் ஞான தாயகனே போற்றி
- ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
- ஓம் திரிபுராந்தகனே போற்றி
- ஓம் திரிபுர தாண்டவனே போற்றி
- ஓம் திருக்கூத்தனே போற்றி
- ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி
- ஓம் திருவடிவனே போற்றி
- ஓம் தில்லை வாணனே போற்றி
- ஓம் துர்தூரப்ரியனே போற்றி
- ஓம் துயர் துடைப்பவனே போற்றி
- ஓம் தேவசபையனே போற்றி
- ஓம் தேவாதி தேவனே போற்றி
- ஓம் நாத ரூபனே போற்றி
- ஓம் நாகராஜனே போற்றி
- ஓம் நாகாபரணனே போற்றி
- ஓம் நாதாந்த நடனனே போற்றி
- ஓம் நிலவணியனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நிருத்த சபையனே போற்றி
- ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
- ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி
- ஓம் பரம தாண்டவனே போற்றி
- ஓம் பஞ்ச சபையனே போற்றி
- ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
- ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி
- ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி
- ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
- ஒம் பிருங்கி நடனனே போற்றி
- ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
- ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
- ஓம் புலித்தோலனே போற்றி
- ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
- ஓம் பிரச்னரூபனே போற்றி
- ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
- ஓம் மண்சுமந்தவனே போற்றி
- ஓம் மணியணியனே போற்றி
- ஓம் மான்கரனே போற்றி
- ஓம் மழுவேந்தியவனே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் முனிதாண்டவனே போற்றி
- ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
- ஓம் முயலக சம்காரனே போற்றி
- ஒம் முக்தியருள்பவனே போற்றி
- ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
- ஓம் ராஜசபையனே போற்றி
- ஓம் ரட்சக தாண்டவனே போற்றி
- ஓம் ருத்ர தாண்டவனே போற்றி
- ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
- ஓம் ருண விமோசனனே போற்றி
- ஓம் லயிக்க வைப்பவனே போற்றி
- ஓம் லலிதா நாயகனே போற்றி
- ஓம் விரிசடையனே போற்றி
- ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
- ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி போற்றி!