விநாயகர்
கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்.
முருகன்
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.
மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!
சிவன்
சிவனோடொக்குந் தெய்வந் தேடினுமில்லை
அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
அன்புஞ் சிவமு மிரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே.
அம்பாள்
பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
விஷ்ணு
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச் சுவை தேறல் என்கோ கனிஎன்கோ பால் என்கேனோ
SriRamar
Sree Ram Jaya Ram Siva Ram
நவக்ரஹம்: சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி