Sri Soundaryanayaki Sametha Sri Gowthameswarar Temple.
Lord : Gowthameswarar
Amman/Mother: Sri Soundaryanayaki
Creepy : 1000-1500 years ago
Trail: Japthikarani Village
District : Tiruvannamalai Sambuvarayar
Taluk : Vandavasi
State : Tamilnadu
Country : India
Festival : Prathosam, Shivaratri, Sankatahara Chaturthi., Pournami,Amavasai , Yearly Mahasivatatri and Daily Pooja
Opening Hours : From 6.00 AM to 10.00 AM & 5 PM to 8 PM
ஸ்தலபுராணம் மற்றும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத ஸ்ரீ கௌதமேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு.
- இந்திய சுதந்திர தினமான 1947 ஆம் ஆண்டுக்கு முன்னரே இங்கு இருந்த சிவன் ஆலயம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. அங்கே கல்லாலான பழைய சிவலிங்கம், ஸ்ரீ நந்தியம்பெருமான் அதே இடத்தில் கிணறும் கண்டெடுக்கப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு சிறிய குடில் அமைத்துவழிபாடு தொடங்கப்பட்டது.
- 2002 ஆம் ஆண்டு சிவபெருமானுக்கு முதல் முறையாக மூலவர் சன்னதியும், முன்பக்கத்தில் நந்தியம்பெருமானுக்கு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டது.
- 2003 ஆம் ஆண்டு முதல் புதிய மூலவர் சன்னதியில் அருள்மிகு சிவபெருமானுக்கும், ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு ,மண்டபத்தில் நந்தியம் பெருமாளுக்கும் பூஜை செய்ய தொடங்கப்பட்டது.
- 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு ஒரு விமானம், அஸ்தமண்டபம் ஒரு விமானம், கருவறைக்கு மேல் கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் அமைக்கப்பட்டது. இதே வருடத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மகா சிவராத்திரி அன்று மதிய நேரத்தில் அன்னதான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
- 2019 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து கொடிமரம் செய்யப்பட்டு ஆலயத்திற்கு கொண்டு சென்று நிறுவப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டு மழைக்காலங்களில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த EB போஸ்டை, உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் நிறுவப்பட்டது.
- 28/10/2021 மகா மண்டபம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. 2022 மகா சிவராத்திரிக்குள் மகா மண்டபம் அமைக்கப்பட்டு, அன்னதானம் மகா மட்டத்திற்கு உள்ளேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட தொடங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இருந்த பழைய கிணற்றை சரி செய்து கிரில் அமைத்து, மோட்டார் மற்றும் நீர் தொட்டி அமைத்து பொதுமக்களும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டு ஸ்ரீ சௌந்தர்ய நாயகிக்கு தனி விமானம் கலசத்துடன் அமைக்கப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டு நவகிரகங்களுக்கு மகா மண்டபத்திற்குள் தனி மேடை அமைத்து நவகிரகங்கள் அவர்கள் துணையுடன் அமைத்து, வழிபாடு தொடங்கப்பட்டது.
- 2022, 2023 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இரவில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
- 2023 ஆம் ஆண்டு மரத்தில் ஆன சிறிய நந்தி வாகனம் செய்யப்பட்டு பிரதோஷ நாட்களில் இந்த நந்தி வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
- 2023 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் அனுமனுக்கு தனி சன்னதி, ஸ்ரீ ஐயப்பனுக்கும் தனி சன்னதி கோபுர கலசத்துடன் உருவாக்கப்பட்டு பூஜை செய்ய தொடங்கப்பட்டது
- 2023 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று முதல் முறையாக உற்சவர் வீதி உலா நிகழ்ச்சி சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.
- 2024 ஆம் ஆண்டு தெற்கு பகுதியில் 20 அடிக்கு சுற்றுச் சுவர் அகலப்படுத்தப்பட்டு நாகர்களுக்கு அரச மரம் மற்றும் வேப்பமரத்து அடியில் தனியாக மேடை அமைத்து பூஜை செய்ய தொடங்கப்பட்டது. மகா சிவராத்திரி அன்று உற்சவர் வீதி உலா நிகழ்ச்சி சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.
*** ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை, இரண்டு பிரதோஷ தினங்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
***ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது