Sri Ganesh Mantra
Shree Vakratunda Mahakaya Suryakoti Samaprabha
Nirvighnam Kuru Me Deva Sarva-Kaaryeshu Sarvada॥
‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ; தந்தி ப்ரசோதயாத்’
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்டவித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
ஓம் விக்ன விநாயகா போற்றி…
கணேச பஞ்சரத்னம்
1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்
2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்
3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்
4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம் ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம் அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம் ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.
ஸ்ரீகணநாயக அஷ்டகம்
“ஓம் கம் கணபதயே நம”
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் லம்போதரம் விசாலாஷம் வந்தே அஹம் கணநாயகம்
பௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனதரம் நாகயகஞோப வீதினம்
பாலேந்து சகலம் மௌலௌ வந்தே அஹம் கணநாயகம்
சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
காமரருபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
கஜவக்த்ரம் சுரச்ரேஷ்டம் கர்ண சாமரபூஷிதம்
பாசாங்குசதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
மூஷிகோத்தமாருஹ்ய தேவாசுர மஹா ஹவே
யோத்துகாமம் மஹாவீரம் வந்தே அஹம் கணநாயகம்
யஷகின்னர கந்தர்வ சித்த வித்தியா தனரஸ்ஸதா
ஸ்தூயமானாம் மஹாபாஹீம் வந்தே அஹம் கணநாயகம்
அம்பிகாஹ்ருத யானந்தம் மாத்ருபிர் பரிவேஷ்டிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம்
சர்வ விக்னஹரம் தேவம் சர்வ விக்னவிவர்ஜிதம்
சர்வ சித்தி ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர:
சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி .
Om Sri Niruttha Ganapathayey Namaha
Om Sri Baala Ganapathayey Namaha
Om Sri Tharuna Ganapathayey Namaha
Om Sri Bhakti Ganapathayey Namaha
Om Sri Veera Ganapathayey Namaha
Om Sri Shakti Ganapathayey Namaha
Om Sri Dhvija Ganapathayey Namaha
Om Sri Siddhi Ganapathayey Namaha
Om Sri Uchishta Ganapathayey Namaha
Om Sri Vigna Ganapathayey Namaha
Om Sri Kshipra Ganapathayey Namaha
Om Sri Heramba Ganapathayey Namaha
Om Sri Lakshmi Ganapathayey Namaha
Om Sri Maha Ganapathayey Namaha
Om Sri Vijaya Ganapathayey Namaha
Om Sri Niruttha Ganapathayey Namaha
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா
வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:
சக்தி விநாயக மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:
விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்
ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
*சக்தி வாய்ந்த அபூர்வ கணபதி மூலமந்திரங்கள்*
*************************************************
1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)
மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம் பஜே
3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)
அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !
ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:
ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்
5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்
6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)
வக்ர துண்டாய ஹும்
9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)
ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ரக்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!
10. புஷ்டி கணபதி :
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா
11. பால கணபதி : (மகிழ்ச்சி)
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா
கரஸ்த-கதளீ சூத
பநஸேக்ஷúக- மோதகம்
பால ஸுர்ய- நிபம் வந்தே
தேவம் பால கணாதிபம்
12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற)
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்
பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்
பயாபஹம் சக்தி கணேசமீடே
13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா
14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)
ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா
18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)
ஓம் கூம் நம:
19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா
பாசாங்குச-ஸ்வதந் தாம்ர
பல வா நாகு வாஹந
விக்நம் நிஹந்து ந: ஸர்வம்
ரக்தவர்ணோ விநாயக
20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)
ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக
22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)
ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா
23. வீர கணபதி : (தைரியம் வர)
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி
24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)
ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா
25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)
ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா
சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர
26. ராஜ கணபதி
ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா
27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:
28. யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
29. நிருத்த கணபதி : (கலை வளர)
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்
30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)
ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா
31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)
ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா
34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:
35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)
ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்
36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)
ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா
37. பக்த கணபதி
நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்
38. த்விஜ கணபதி
ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய
39. க்ஷிப்ர கணபதி
தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்
40. ஹேரம்ப கணபதி
அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா
41. ஊர்த்வ கணபதி
கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந
42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்
43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம்
கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்
நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:
46. கணேசர் மாலா மந்திரம்
ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே
ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே
ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.
47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :
ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா
48. போக கணபதி (ஸகலபோகப்ரதம்)
அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ
கராங்கந்யாஸ:
ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா
தியானம்
பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி
ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:
லமித்யாதி பூஜா
மந்த்ரா :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்
49. கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :
அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
கராங்கந்யாஸ:
ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:
*தியானம்*
முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி
*லமித்யாதி பூஜா*
*மந்த்ர:*
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா
*ஸமர்ப்பணம்:-*
50. குமார கணபதி (மாலா மந்த்ர:)
ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:
51. ப்ரயோக கணபதி (மாலா மந்த்ர)
ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :
52. தருண கணபதி (தியானம்)
பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:
*மந்த்ரம் :-*
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:
53. ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:
54. நவநீத கணபதி (மனோவச்யம்)
ஐம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம:
55. மேதா கணபதி (மேதாபிவ்ருத்தி)
மேதோல்காய ஸ்வாஹா:
56. வாமன கணபதி (விஷ்ணு பக்தி)
ஓம் வம் யம் ஸெளபாக்யம் குரு குரு ஸ்வாஹா:
57. சிவாவதார கணபதி
ஓம் ஸ்ரீம் த்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வர வரத ஓம் வாம் ஸர்வ ஜனம் மே ஓம் யம் வசமானய ஸ்வாஹா:
58. ரக்த கணபதி (வச்யஸித்தி)
ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹும் ஹும் ஹும் கே கே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா :
*59. ப்ரம்மணஸ்பதி*
1. ஹ்ரீம் ச்ரீம் க்லீம் நமோ கணேச்வராய ப்ரும்ம ரூபாய சாரவே
ஸர்வஸித்தி ப்ரதேயாய ப்ரம்மணஸ்பதயே நம:
2. நமோ கணபதயே துப்யம் ஹேரம்பாயைக தந்தினே ஸ்வானந்த
வாஸினே துப்யம் ப்ரம்மணஸ்பதயே நம:
60. மஹா கணபதி ப்ரணவமூலம்
ஓம்
*த்வநி மந்திரம்*
ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்
*சதாசிவ கணபதி*
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் ஈம் நம் ஆம் ஹம் ஸம்பன்னுவஸ்ச ஸதாசிவ கணபதயே வரவரத ஸர்வ ஜகம் மே வசமானய ஸகலைச் வர்யம் ப்ரயச்ச ஸ்வாஹா
ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி
ஓம் மாத்ருகணபதி பித்ருகணபதி தேவகணபதி ரிஷிகணபதி ஸ்வாத்மகுரு கணபதி ஸர்வாத்மகணபதயே நம: ஓம்
ஆத்மாவே ஸ்ரீ குரு கணபதி.
- ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ
- ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ
- ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ
- ஓம் ஆனந்த கணபதயே நமஹ
- ஓம் மஹா கணபதயே நமஹ
- ஓம் பால கணபதயே நமஹ
- ஓம் தருண கணபதயே நமஹ
- ஓம பக்த கணபதயே நமஹ
- ஓம் வீர கணபதயே நமஹ
- ஓம் ஸக்தி கணபதயே நமஹ
- ஓம் த்விஜ கணபதயே நமஹ
- ஓம் ஸித்தி கணபதயே நமஹ
- ஓம் உச்சிஷ்ட கணபதயே நமஹ
- ஓம் விக்ன கணபதயே நமஹ
- ஓம் ஷப்ர கணபதயே நமஹ
- ஓம் ஹேரம்ப கணபதயே நமஹ
- ஓம் லக்ஷ்மீ கணபதயே நமஹ
- ஓம் விஜய கணபதயே நமஹ
- ஓம் ந்ருத்ய கணபதயே நமஹ
- ஓம் ஊர்த்வ கணபதயே நமஹ
- ஓம் ஏகாக்ஷர கணபதயே நமஹ
- ஓம் வரகணபதயே நமஹ
- ஓம் த்யக்ஷர கணபதயே நமஹ
- ஓம் ஷப்ர ப்ரஸாத கணபதயே நமஹ
- ஓம் ஏகதந்த கணபதயே நமஹ
- ஓம் ஸ்ருஷ்டி கணபதயே நமஹ
- ஓம் உத்தண்ட கணபதயே நமஹ
- ஓம் ருணரோக விமோசன கணபதயே நமஹ
- ஓம் டுண்டி கணபதயே நமஹ
- ஓம் த்விமுக கணபதயே நமஹ
- ஓம் த்ரிமுக கணபதயே நமஹ
- ஓம் ஸிம்ஹ கணபதயே நமஹ
- ஓம் யோக கணபதயே நமஹ
- ஓம் துர்கா கணபதயே நமஹ
- ஓம் ஸங்கடஹர கணபதயே நமஹ
- ஓம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத வல்லப கணபதயே நமஹ
- ஓம் ஸுமுகாய நமஹ
- ஓம் ஏகதந்தாய நமஹ
- ஓம் கபிலாய நமஹ
- ஓம் கஜகர்ணிகாய நமஹ
- ஓம் லம்போதராய நமஹ
- ஓம் விகடாய நமஹ
- ஓம் விக்னராஜாய நமஹ
- ஓம் கணாதிபதயே நமஹ
- ஓம் தூமகேதவே நமஹ
- ஓம் கணாத்யக்ஷாய நமஹ
- ஓம் பாலசந்த்ராய நமஹ
- ஓம் கஜானனாய நமஹ
- ஓம் வக்ரதுண்டாய நமஹ
- ஓம் ஸூர்ப்பகர்ணாய நமஹ
- ஓம் ஹேரம்பாய நமஹ
- ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ
- ஓம் வல்லப கணபதயே நமஹ
பிள்ளையார் ச்லோகம்
அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-
த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது : தத்-ஹேதோரிதி நீதிவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம் ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ) வ்யாத் ஸ ந :
இது தான் ‘ந்யாயேந்து சேகர’த்தின் மங்கள ச்லோகம்.
இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்துதர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’என்பதாகும்.
விநாயகர் தியான ஸ்லோகம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
- ஓம் விநாயகனே போற்றி
- ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
- ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி
- ஓம் அகந்தை அளிப்பவனே போற்றி
- ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
- ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
- ஓம் ஆனை முகத்தானே போற்றி
- ஓம் ஆதி மூலமே போற்றி
- ஓம் ஆனந்த உருவே போற்றி
- ஓம் இமவான் சந்ததியே போற்றி
- ஓம் இடரைக் களைவோனே போற்றி
- ஓம் ஈசன் மகனே போற்றி
- ஓம் ஈகை உருவே போற்றி
- ஓம் உண்மை வடிவே போற்றி
- ஓம் உலக நாயகனே போற்றி
- ஓம் ஊறும் களிப்பே போற்றி
- ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
- ஓம் எளியவனே போற்றி
- ஓம் எந்தையே போற்றி
- ஓம் எங்கும் இருப்பவனே போற்றி
- ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
- ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
- ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐங்கரனே போற்றி
- ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
- ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
- ஓம் ஒளிமய உருவே போற்றி
- ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
- ஓம் கருணாகரனே போற்றி
- ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
- ஓம் கணேசனே போற்றி
- ஓம் கணநாயகனே போற்றி
- ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
- ஓம் கலியுக நாதனே போற்றி
- ஓம் கற்பகத் தருவே போற்றி
- ஓம் கந்தனுக் குதவியவனே போற்றி
- ஓம் கிருபாநிதியே போற்றி
- ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
- ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
- ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
- ஓம் குணநிதியே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
- ஓம் கூவிட வருவோனே போற்றி
- ஓம் கூத்தன் மகனே போற்றி
- ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
- ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
- ஓம் கோனே போற்றி
- ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
- ஓம் சடுதியில் வருபவனே போற்றி
- ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
- ஓம் சங்கடகரனே போற்றி
- ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
- ஓம் சிறிய கண்ணோனே போற்றி
- ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
- ஓம் சுருதிப் பொருளே போற்றி
- ஓம் சுந்தரவடிவே போற்றி
- ஓம் ஞானம் காப்பவனே போற்றி
- ஓம் ஞான முதல்வனே போற்றி
- ஓம் தந்தம் உடைந்தோனே போற்றி
- ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
- ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
- ஓம் துயர் துடைப்பவனே போற்றி
- ஓம் தெருவெல்லாம் காப்பவனே போற்றி
- ஓம் தேவாதி தேவனே போற்றி
- ஓம் தொந்தி விநாயகனே போற்றி
- ஓம் தோணியே போற்றி
- ஓம் தோன்றலே போற்றி
- ஓம் நம்பியே போற்றி
- ஓம் நாதனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நீர்க் கரை அமர்ந்தவனே போற்றி
- ஓம் பழத்தை வென்றவனே போற்றி
- ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
- ஓம் பரம்பொருளே போற்றி
- ஓம் பரிபூரணனே போற்றி
- ஓம் பிரணவமே போற்றி
- ஓம் பிரம்மச்சாரியே போற்றி
- ஓம் பிள்ளையாரே போற்றி
- ஓம் பிள்ளையார் பட்டியானே போற்றி
- ஓம் பிறவிப் பிணி தீர்ப்பவனே போற்றி
- ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
- ஓம் புதுவை வடிவே போற்றி
- ஓம் புண்ணியனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பெரிய உடலோனே போற்றி
- ஓம் பேரருளாளனே போற்றி
- ஓம் பேதம் அறுப்பவனே போற்றி
- ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
- ஓம் மகிமையளிப்பவனே போற்றி
- ஓம் மகா கணபதியே போற்றி
- ஓம் மகேசுவரனே போற்றி
- ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
- ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
- ஓம் முறக்காதோனே போற்றி
- ஓம் முழுமுதற் கடவுளே போற்றி
- ஓம் முக்கண் மகனே போற்றி
- ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி
- ஓம் மூத்தோனே போற்றி
- ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
- ஓம் வல்லப கணபதியே போற்றி
- ஓம் வரம் தரும் நாயகனே போற்றி
- ஓம் விக்னேஸ்வரனே போற்றி
- ஓம் வியாசன் சேவகனே போற்றி
- ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
- ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்.
வியாபாரத்தை பெருக வைப்பார
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
15 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்..
கணபதியின் அருளைப் பெறுவதற்கான விரதங்கள்….!!
- வைகாசி வளர்பிறை:
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
- செவ்வாய் விரதம்:
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
- சதுர்த்தி விரதம்:
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
- குமாரசஷ்டி விரதம்:
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
- தூர்வா கணபதி விரதம்:
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
- சித்தி விநாயக விரதம்:
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
- தூர்வாஷ்டமி விரதம்:
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
- விநாயக நவராத்திரி:
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
- வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
- செவ்வாய் பிள்ளையார் விரதம்:
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
- அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.