குபேர காயத்ரி மந்திரம்:
ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்.
இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
- ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
- ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!
பயன்கள்::
இந்த மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர சகல கிரக தோஷங்களும்,பாவமும் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும்,பெயர் புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை
மந்திரம்நம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பல வகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. அவை ஒருவரி மூலம், மூலமந்திரம், காயத்ரி மந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் சொன்ன சிந்தாமணி மந்திரம்.
கேட்டதைத் தரும் சிந்தாமணி என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து தனம் சேர்ப்பார்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!
பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதி படிப்பதாலும் தாமிரத்தகட்டில் குபேர சக்கரமும் எழுதி ஐங்காயத்தைப் பூசி அதிகாலையில் ஜெபம் செய்து வர வீடும், தொழிலகமும் அபரிமிதமான செல்வத்தைச் சேர்க்கும் என்பது பெரியோர் வாக்கு-ரத்தின கோசர நூல்.
- அளகாபுரி அரசே போற்றி
- ஆனந்தம் தரும் அருளே போற்றி
- இன்பவளம் அளிப்பாய் போற்றி
- ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
- உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
- ஊக்கம் அளிப்பவனே போற்றி
- எளியோனுக்கு அருள்பவனே போற்றி
- ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
- ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
- ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
- ஓங்கார பக்தனே போற்றி
- கருத்தில் நிறைந்தவனே போற்றி
- கனகராஜனே போற்றி
- கனகரத்தினமே போற்றி
- காசு மாலை அணிந்தவனே போற்றி
- கிந்நரர்கள் தலைவனே போற்றி
- கீர்த்தி அளிப்பவனே போற்றி
- கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
- குருவாரப் பிரியனே போற்றி
- குணம் தரும் குபேரா போற்றி
- குறை தீர்க்கும் குபேரா போற்றி
- கும்பத்தில் உறைபவனே போற்றி
- குண்டலம் அணிந்தவனே போற்றி
- குபேர லோக நாயகனே போற்றி
- குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
- கேடதனை நீக்கிடுவாய் போற்றி
- கேட்டவரம் அளிப்பவனே போற்றி
- கோடி நிதி அளிப்பவனே போற்றி
- சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
- சங்கரர் தோழனே போற்றி
- சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
- சமயத்தில் அருள்பவனே போற்றி
- சத்திய சொரூபனே போற்றி
- சாந்த சொரூபனே போற்றி
- சித்ரலேகா பிரியனே போற்றி
- சித்ரலேகா மணாளனே போற்றி
- சிந்தையில் உறைபவனே போற்றி
- சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
- சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
- சிவபூஜை பிரியனே போற்றி
- சிவ பக்த நாயகனே போற்றி
- சிவ மகா பக்தனே போற்றி
- சுந்தரர் பிரியனே போற்றி
- சுந்தர நாயகனே போற்றி
- சூர்பனகா சகோதரனே போற்றி
- செந்தாமரைப் பிரியனே போற்றி
- செல்வ வளம் அளிப்பவனே போற்றி
- செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
- சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
- சொக்கநாதர் பிரியனே போற்றி
- சௌந்தர்ய ராஜனே போற்றி
- ஞான குபேரனே போற்றி
- தனம் அளிக்கும் தயாபரா போற்றி
- தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
- திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
- திருவிழி அழகனே போற்றி
- திருவுரு அழகனே போற்றி
- திருவிளக்கில் உறைவாய் போற்றி
- திருநீறு அணிபவனே போற்றி
- தீயவை அகற்றுவாய் போற்றி
- துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
- தூயமனம் படைத்தவனே போற்றி
- தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
- தேவராஜனே போற்றி
- பதுமநிதி பெற்றவனே போற்றி
- பரவச நாயகனே போற்றி
- பச்சை நிறப் பிரியனே போற்றி
- பவுர்ணமி நாயகனே போற்றி
- புண்ணிய ஆத்மனே போற்றி
- புண்ணியம் அளிப்பவனே போற்றி
- புண்ணிய புத்திரனே போற்றி
- பொன்னிற முடையோனே போற்றி
- பொன் நகை அணிபவனே போற்றி
- புன்னகை அரசே போற்றி
- பொறுமை கொடுப்பவனே போற்றி
- போகம்பல அளிப்பவனே போற்றி
- மங்கல முடையோனே போற்றி
- மங்களம் அளிப்பவனே போற்றி
- மங்களத்தில் உறைவாய் போற்றி
- மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
- முத்து மாலை அணிபவனே போற்றி
- மோகன நாயகனே போற்றி
- வறுமை தீர்ப்பவனே போற்றி
- வரம் பல அருள்பவனே போற்றி
- விஜயம் தரும் விவேகனே போற்றி
- வேதம் போற்றும் வித்தகா போற்றி
- வைர மாலை அணிபவனே போற்றி
- வைகுண்டவாசப் பிரியனே போற்றி
- நடராஜர் பிரியனே போற்றி
- நவதான்யம் அளிப்பவனே போற்றி
- நவரத்தினப் பிரியனே போற்றி
- நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
- நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
- வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
- ராவணன் சோதரனே போற்றி
- வடதிசை அதிபதியே போற்றி
- ரிஷி புத்திரனே போற்றி
- ருத்திரப் பிரியனே போற்றி
- இருள் நீக்கும் இன்பனே போற்றி
- வெண்குதிரை வாகனனே போற்றி
- கைலாயப் பிரியனே போற்றி
- மனம் விரும்பும் மன்னவனே போற்றி
- மணிமகுடம் தரித்தவனே போற்றி
- மாட்சிப் பொருளோனே போற்றி
- யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
- யௌவன நாயகனே போற்றி
- வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி
– இந்த லட்சுமி குபேர பூஜையை அமாவாசை மற்றும் பூச நட்சத்திரங்களில் தொடர்ந்து செய்து வருவது நிறைந்த செல்வ வளம் தரும்
(க்லீம் என்பது குபேரனது முக்கிய பீஜமந்திரம்).
ஓம் க்லீம் குபேரா போற்றி
ஓம் க்லீம் ஸ்ரீமத போற்றி
ஓம் க்லீம் பூரணா போற்றி
ஓம் க்லீம் அஸ்வ ஆரூடா போற்றி
ஓம் க்லீம் நரவாகனா போற்றி
ஓம் க்லீம் புட்பக வாகனா போற்றி
ஓம் க்லீம் யட்சேனா போற்றி
ஓம் க்லீம் கட்காயுதா போற்றி
ஓம் க்லீம் நிதி ஈஸ்வரனே போற்றி
ஓம் க்லீம் நித்யானந்தனே போற்றி
ஓம் க்லீம் தனலட்சுமி வாசனே போற்றி
ஓம் க்லீம் சுகாஸ்ரயனே போற்றி
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய போற்றி
ஓம் க்லீம் சர்வக்ஞனே போற்றி
ஓம் க்லீம் சிவபூஜை பிரியனே போற்றி
ஓம் க்லீம் ராஜயோகம் தருபவனே போற்றி
கற்கண்டு பால், அவல்,பாயசம் படைத்து நெய்தீப ஆரத்தி செய்து வணங்க வேண்டும் ஆத்ம பிரதட்சிணம் செய்த பிறகு ஓரு பெண்ணை லட்சுமியாக பாவித்து தாம்பூலம் தருக.
சங்கு தீர்த்தத்தை ஒரு செம்பு நீரில் கலந்து மூன்று முறை தீர்த்தம் எடுத்துக் கொண்ட பிறகு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.