ஸ்ரீ வாயுதேவன்

வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.

காற்றுக் கடவுளான வாயு தேவன் தனது மான் வாகனத்தில் வானத்தைச் சுற்றி வருகிறார். இவா் எப்போதுமே சுற்றிக் கொண்டிருப்பார் என்றும் உக்கிரத்துடன் காணப்படுவார் என்றும் அறியப்படுகிறார். வாயு பகவான் அனுமனின் தந்தையாக இருப்பதால் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறார்.
வாயு காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே ரகசிய சஞ்சாரய தீமஹி தன்னோ வாயு ப்ரசோதயாத்.
வாயு பகவான் மந்திரம்
வாயும் மிருக வராரூடம் ஸ்வாதி நட்சத்திர தேவதாம்|     சர்மோஜ்வலகர த்விதயம் ப்ரணமாம்யஹம்||

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி