Sree Brahma Vidyambal Portri, Sree shwetaranyeswarar Portri
ஓம் ப்ரம் ப்ரிம் ப்ரௌம் ச புதாய நமஹ
புதன் (படிப்பும், அறிவும் பெற)
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதம்தந்து அருள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி!!
(இதைப் பாராயணம் செய்வதால் ஜாதகத்தில் புதன் நீசனாகவோ தோஷமுள்ளவனாகவோ, புதனுடைய தசாபுக்திகளால் தோஷம் ஏற்பட்டாலும், அந்த தோஷங்கள் விலகுவதோடு கோரிய பொருள்களும் கிடைக்கும்.)
- புதோ புத்திமதாம் ச்ரேஷ்டோ புத்திதாதா தனப்ரத:
ப்ரியங்கு கலி காச்யாம: கஞ்சநேத்ரோ மனோஹர: - க்ரஹோபமோ ரௌஹிணேயோ நட்சத்ரேசோ தயாகர:
விருத்த கார்யஹ்ந்தா ச ஸெளம்யோ புத்திவிவர்தன: - சந்த்ராத்மஜோ விஷ்ணுரூபீ ஞானீக்ஞோ ஞானிநாயக:
க்ரஹபீடாஹரோ தாரபுத்ர தான்ய பசுப்ரத: - லோகப்ரிய: ஸெளம்யமூர்த்திர் குணதோ குணவத்ஸல:
பஞ்சவிம்சதி நாமானி புதஸ்யைதானி ய: படேத்: - ஸ்ம்ருத்வா புதம் ஸதா தஸ்ய பீடா ஸர்வா விநச்யதி:
தத்தினே வா படேத் யஸ்து லபதே ஸ மனோகதம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண
அப்ரதிமம் சுபம் ஸெளம்யம்
ஸெளம்ய குளோபேதம் தம்
புதம் ப்ரணமாம்யஹம்!
மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான் புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.
சகல சாஸ்த்திரத்தில் ஞானம் பெற சௌந்தர்யாலஹரியில் கூறியுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் பண்ணலாம்.
சவித்ரிபீர் வாசாம் சசிமணி சிலாபங்க ருசிபி வசிந் யாத் யாபீஸ் த்வாம் சஹ ஜனனி ஸந்சிந்த தயதிய! சகர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கி சுபகை: வசோபிர் வாக்தேவி வதன கமலாமோத மதுரை.
ஓம் புதாய நம :
ஓம் புதார்சிதாய நம :
ஓம் ஸெம்யாய நம :
ஓம் ஸெளம்சித்தாய நம :
ஓம் ஸுபப்ரதாய நம :
ஓம் த்ருடபலாய நம :
ஓம் ஸ்திரிஜாலப்ரபோதகாய நம :
ஓம் த்ரிதஸாதிபூஜிதாய நம :
ஓம் புத்திமதே நம :
ஓம் பஹுஸாஸ்ரக்ஞாய நம :
ஓம் பவிநே நம :
ஓம் பந்தவிமோசநாய நம :
ஓம் வக்ராதிவக்ரகமநாய நம :
ஓம் வஸவாய நம :
ஓம் வஸுதாதிபாய நம :
ஓம் ஸத்யவாஸாய நம :
ஓம் ஸத்யவசஸே நம :
ஓம் ஸரேயஸாம்பதயே நம :
ஓம் த்ருடௌரதாய நம :
ஓம் ஸோமஜாய நம :
ஓம் ஸுகதாய நம :
ஓம் ஸ்ரீமதே நம :
ஓம் ஸோமவம்ஸப்ரதீபாய நம :
ஓம் வேதவிதே நம :
ஓம் வேதத்வக்ஞாய நம :
ஓம் வராய நம :
ஓம் வித்யாவிசக்ஷனாய நம :
ஓம் விதுஷே நம :
ஓம் வித்வத்ப்ரீதிகராய நம :
ஓம் குஜவே நம :
ஓம் விஸ்வாநுகூலஸம்
ஓம சாரிணே நம :
ஓம் விசேஷவிநயாந்விநாய நம :
ஓம் விவிதாகமஸாரக்ஞாய நம :
ஓம் வீர்யவதே நம :
ஓம் விகதஜ்வராய நம :
ஓம் த்ரிவாகபலதாய நம :
ஓம் அநந்தாய நம :
ஓம் சபலாய நம :
ஓம் ஜிதேந்திரியாய நம :
ஓம் உதங்கமுகாய நம :
ஓம் மகரஸக்தாய நம :
ஓம் மகதாரிபதயே நம :
ஓம் ஹரயே நம :
ஓம் பரஸாதவதநாய நம :
ஓம் வந்த்யாய நம :
ஓம் வாக்விலக்ஷணாய நம :
ஓம் ஸத்யவே நம :
ஓம் அவ்யாய நம :
ஓம் ஸத்யஸங்கல்பாய நம :
ஓம் ஸதாதராய நம :
ஓம் ஸாவரோகப்ரஸமநாய நம :
ஓம் வாணிவஜ்நிபுணாய நம :
ஓம் பஸ்யாய நம :
ஓம் வாதாங்கிநே நம :
ஓம் வாதரோகஹ்ருதே நம :
ஓம் ஸ்தூலாய நம :
ஓம் ஸ்தைர் யகுணாத்யக்ஷhய நம :
ஓம் ஸ்தூலஸுக்ஷ்மாதி :
ஓம் கரணாய நம :
ஓம் அம்ரகாஸாய நம :
ஓம் ப்ரகாஸாத்மநே நம :
ஓம் கநாய நம :
ஓம் கநகபூஷணாய நம :
ஓம் விநிஸ்துத்யாய நம :
ஓம் வித்வஜ்ஜனமனோஹராய நம :
ஓம் ஸவப்ரகாஸாய நம :
ஓம் சாரணாய நம :
ஓம் சாருபூஷணாய நம :
ஓம் வீதராகாய நம :
ஓம் வீதபயாய நம :
ஓம் விஸுத்தகநப்ரதாய நம :
ஓம் பந்து ப்ரியாய நம :
ஓம் ஸெளம்யவத்ஸரஸக்ஞாதாய நம :
ஓம் ஸோமப்ரியக்ராய நம :
ஓம் சுகிநே நம :
ஓம் ஸிம்ஹாதிரூடாய நம :
ஓம் ஸர்வக்ஞாய நம :
ஓம் ஸிகிவர்ணா நம :
ஓம் ஸிவங்கராய நம :
ஓம் பீதாம்பராய நம :
ஓம் பீதவபுஷே நம :
ஓம் பீதச்சத்வாஜஞ்சிதாய நம :
ஓம் கட்கசர்மதராய நம :
ஓம் க்ராயாத்ரே நம :
ஓம் கலுஷஹார்காய நம :
ஓம் ஆத்ரேயகோத்ரஜாய நம :
ஓம் அத்யந்தவிநயாய நம :
ஓம் விஸ்வபாவநாய நம :
ஓம் சாம்பேயபுஷ்பஸங்காஸாக நம :
ஓம் முக்தாய நம :
ஓம் பாணமண்டஸம்ஸரிதாய நம :
ஓம் அர்கோஸநநிவாஸஸ்தாய நம :
ஓம் தர்க்கஸாஸ்த்ரவிசரதாய நம :
ஓம் ப்ரஸாந்தாய நம :
ஓம் ப்ரீதிஸம்யுக்தாய நம :
ஓம் ப்ரியக்ருதே நம :
ஓம் ப்ரிபபாஷணாய நம :
ஓம் மேதாவிநே நம :
ஓம் மாதவாஸக்தாய நம :
ஓம் மிதுநாதிபதயே நம :
ஓம் ஸுதியே நம :
ஓம் கந்யாராஸிப்ரியாய நம :
ஓம் காமப்ரதாய நம :
ஓம் கநபலாஸாயாய நம :
ஓம் புதக்ரஹாய நம :
ஸ்ரீ இடைக்காட்டுச் சித்தர்
தியானச்செய்யுள்
ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க கடைக்கண்
திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
இடையர் குலத்திலே மதுரைக்கு அருகில் இடைக்காடு என்னும் ஊரில் இப்பெருமான்
பிறந்தார். இவர் திருமாலின் அவதாரமாகவும் கூறப்படுகின்றார்.
*பாடல்:* மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முக்தி வாய்த்தது
என்றுஎண்ணோடா தாண்டவக்கோனே.
*விளக்கம்:* கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுபடுத்தி
விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.
*பாடல்:* சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே- யாவும் சித்தி என்றே
நினையேடா தாண்டவக்கோனே.
*விளக்கம்:* கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சுப்பாம்பை அடக்கி
உள்ளத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டால் சித்தி கிடைக்கும். என்பது ஆன்மீக
கருத்து கொண்ட இடைக்காட்டுச் சித்தரின் பாடலாகும்.
ஆடுகளை மேய்த்துக்கொண்டு மெய்மறந்த நிலையில் சிவபெருமானை நினைத்த நின்று
கொண்டிருந்த இவரை வான்வழியே சென்ற “தவநாத சித்தர்” ஒருவர் கண்டு இறங்கி வந்து,
அவரின் சிந்தனைக்கு காரணம் அறிந்தார். சித்தருக்கு விளக்கம் கூறி, அருந்த
பாலும் கொடுத்து உபசரித்தார் இடைக்காட்டுச் சித்தர், அவரின் உபசரிப்பில்
மகிழ்ந்த “தவநாத சித்தர்”இடைக்காட்டுச் சித்தருக்கு வைத்தியம், ஜோதிடம் ,
ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்தார். அன்றுமுதல் இடைக்காடர் பெருமான்
தெய்வத்தன்மை பெற்றவராகத் திகழ்ந்தார். தமது ஜோதிடத்திறமையால் சிறிதுகாலத்தில்
பனிரெண்டு வருடங்களுக்கு பஞ்சம் வரும் நிலையை உணர்ந்தார்.
உடனே ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கும் எருக்கிலையைக் கொடுத்துப்
பழக்கினார். குருவரகு என்னும் தானியத்தை சேற்றோடு கலக்கி சுவர் வைத்து குடிசை
ஒன்றைக்கட்டினார், எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்து புள் பூண்டோடு உயிர்களும்
மாண்டன. ஆனாலும் இடைக்காடர் ஸ்வாமியுடைய ஆடுகள் இருக்கிளையைத் தின்று உயிர்
வாழ்ந்தன. ஆடுகள் அடிக்கடி தன் உடலை குருவரகு சுவற்றில் தேய்க்கும் பொழுது
உதிரும் வரகைத்தட்டியும், ஆட்டுப்பால் குடித்தும் இடைக்காடர் பெருமான் உயிர்
வாழ்ந்தார்.
வியப்படைந்த நவக்கிரகங்களே இதைக்காண அவர் வீட்டிற்கு வந்தனர். சித்தர்
பெருமான் சமைத்த வரகு சாதத்தையும், ஆட்டின் பாலையும் குடித்து மயக்கத்தில்
உறங்கிவிட்டனர்.
ஒன்றுடன் ஓன்று மாறுபட்டு உலகை வருத்திய கோள்களை, மழை பெய்வதற்காக, தமக்கு
வேண்டியபடி இடைக்காடர் மாற்றி மாற்றி படுக்க வைத்துவிட்டார். உடனே வானம்
இருண்டது, மழை பொழிந்தது, பூமி குளிர்ந்து,ஏரிகளும், ஆறுகளும் புத்துயிர்
பெற்றன.நிலையை உணர்ந்த நவக்கிரகங்கள் சித்தரின் அறிவுத்திறனைக் கண்டு வியந்து,
வேண்டிய வரங்களைக் கொடுத்துச் சென்றார்கள்.
இடைக்காட்டுச் சித்தர் நவக்கிரகங்களில் புதபகவானை பிரதிபலிப்பவர். இவரை
முறைப்படி வழிபடுவதால், நம் ஜாதகத்தில் புதபகவானால் ஏற்படக்கூடியவ தோஷம்
நீங்கி, நல்ல பலன்கள் கிட்டும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
கல்விக்கூடங்களுக்கான பிரச்சினைகள், ஆசிரியர்களுக்குண்டான பிரச்சினை அகலும்.
பதினாறு போற்றிகள்
காளிங்க நாட்டிய கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
கருணாமூர்த்தியே போற்றி!
பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
இளநீர் பிரியரே போற்றி!
உலகரட்சகரே போற்றி!
அபயவரதம் உடையவரே போற்றி!
மருந்தின் உருவமானவரே போற்றி!
பூலோகச் சூரியனே போற்றி!
ஒளிமயமானவரே போற்றி!
கருவை காப்பவரே போற்றி!
“ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
கால்நடைகளைக் காப்பவரே போற்றி!
ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
அங்குசத்தை உடையவரே போற்றி!
தேவலீலை பிரியரே போற்றி!
எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி!
போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர்
சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். அதன்பின் நிவேதனமாக
இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும்.