ஸ்ரீ முருக பெருமான் : வளர்பிறை, சஷ்டி

  • அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியஆ  விரிதாரண விக்ரமவேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.
  • மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயில் ஏறிய வானவனே.
  • எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள் கந்தா கதிர் வேலவனே உமையாள்
    மைந்தா குமரா மறைநாயகனே

முருகன் துதி!

  • அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
    முருகா என்று ஓதுவார் முன்
  • வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை
  • காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்  ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா-பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி!

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

சரணம் சரணம் சண்முகா சரணம்.

முருகனின் ‘125’ பெயர்கள்:

1.சக்திபாலன்,
2.சரவணன்,
3.சுப்ரமண்யன்,
4.குருபரன்,
5.கார்த்திகேயன்,
6.சுவாமிநாதன்,
7.தண்டபானி,
8.குக அமுதன்,
9.பாலசுப்ரமணியம்,
10.நிமலன்,
11.உதயகுமாரன்,
12.பரமகுரு,
13.உமைபாலன்,
14.தமிழ்செல்வன்,
15.சுதாகரன்
16.சத்குணசீலன்,
17.சந்திரமுகன்,
18.அமரேசன்,
19.மயூரவாஹனன்,
20.செந்தில்குமார்,
21.தணிகைவேலன்,
22.குகானந்தன்,
23.பழனிநாதன்,
24.தேவசேனாபதி,
25.தீஷிதன்,
26.கிருபாகரன்,
27.பூபாலன்,
28.சண்முகம்,
29.உத்தமசீலன்,
30.குருசாமி
31.திருஆறுமுகம்,
32.ஜெயபாலன்,
33.சந்திரகாந்தன்,
34.பிரபாகரன்,
35.சௌந்தரீகன்,
36.வேல்முருகன்,
37.பரமபரன்,
38.வேலய்யா,
39.தனபாலன்,
40.படையப்பன்,
41.கருணாகரன்,
42.சேனாபதி,
43.குகன்,
44.சித்தன்,
45.சைலொளிபவன்
46.கருணாலயன்
47.திரிபுரபவன்,
48.பேரழகன்,
49.கந்தவேல்,
50.விசாகனன்,
51.சிவகுமார்,
52.ரத்னதீபன்,
53.லோகநாதன்,
54.தீனரீசன்,
55.சண்முகலிங்கம்,
56.குமரகுரு,
57.முத்துக்குமரன்,
58.அழகப்பன்,
59.தமிழ்வேல்,
60.மருதமலை,
61.சுசிகரன்,
61.கிரிராஜன்,
62.குமரன்,
63.தயாகரன்,
64.ஞானவேல்,
65.சிவகார்த்திக்,
66.குஞ்சரிமணாளன்,
67.முருகவேல்,
68.குணாதரன்,
69.அமுதன்,
70.செங்கதிர்செல்வன்,
71.பவன்கந்தன்,
72.திருமுகம்,
73.கதிர்காமன்,
74.வெற்றிவேல்,
75.ஸ்கந்தகுரு
76.பாலமுருகன்,
77.மனோதீதன்,
78.சிஷிவாகனன்,
79.இந்திரமருகன்,
80.செவ்வேல்,
81.மயில்வீரா,
82.குருநாதன்,
83.பழனிச்சாமி,
84.திருச்செந்தில்,
85.சங்கர்குமார்,
86.சூரவேல்,
87.குருமூர்த்தி,
88.சுகிர்தன்,
89.பவன்,
90.கந்தசாமி
91.ஆறுமுகவேலன்,
92.வைரவேல்,
93.அன்பழகன்,
94.முத்தப்பன்,
95.சரவணபவன்,
96.செல்வவேல்,
97.கிரிசலன்,
98.குலிசாயுதன்,
99.அழகன்,
100. தண்ணீர்மலயன்,
101.ராஜவேல்,
102.மயில்பிரீதன்,
103.நாதரூபன்,
104.மாலவன்மருகன்,
105. ஜெயகுமார்
106.செந்தில்வேல்,
107.தங்கவேல்,
108.முத்துவேல்,
109.பழனிவேல்,
110.கதிர்வேல்,
111.ராஜசுப்ரமணியம்,
112.மயூரகந்தன்,
113.சுகதீபன்,
114.குமரேசன்,
115.சுப்பய்யா,
116.கார்த்திக்,
117.சக்திதரன்,
118. முத்துக் குமரன்,
119.வேலவன்,
120.கதிர் வேலன்,
121. விசாகன்,
122. கந்தன்,
123. விசாகன்,
124. குமாரன்,
125.அக்னி பூ

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி