பொதுப்பூசை
ஷட் (ஆறு) +தச (பத்து)= ஷோடச (பதினாறு)
குறிப்பு – இது வைதீக பூசை என்னும் தீக்சையற்றவராலும் கூட செய்யத்தக்க பொதுப்பூசையில் பதினாறு உபசாரங்கள் கொண்ட பூசையாகும். இங்கு சமஸ்கிருதத்தில் உள்ளன மந்திரங்கள் அல்ல. இவை உபசாரங்களும் ஸ்லோகங்களும் ஆகும். இவற்றினை அவ்வாறே உள்ளபடி சொல்ல முடியாதவர்கள் இதே பொருள் பட எந்த மொழியிலும் சொல்லி பூசையினை செய்யலாம்.
1 .#ஆவாஹனம்
(சுவாமியை அழைத்தல் -வரவேற்றல்)
பூசை செய்யும் தெய்வத்தை வரவேற்று அழைத்தல் :
அஸ்மின் பிம்பே **……………(வழிபடும் தெய்வத்தின் நாமம்) தியாயாமி
பொருள் விளக்கம் –
இந்த உருவத்தில்/படத்தில்/ கும்பத்தில் (இந்த தெய்வத்தை) தியானிக்கின்றேன்.
அஸ்மின் பிம்பே **……………(வழிபடும் தெய்வத்தின் நாமம்) ஆவாஹயாமி.
பொருள் விளக்கம் –
இந்த உருவத்தில்/படத்தில்/ கும்பத்தில் (இந்த தெய்வத்தை) வரவழிக்கின்றேன்.
குறிப்பு: ** பயன்படுத்தப்படும் வழிபடு தெய்வத்தின் நாமங்கள் சில::
- விநாயகர் – விக்னேசுவர சுவாமின் ………..
- சிவன் – பார்வதீ சமேத பரமேசுவர சுவாமின் ……….
- அம்பாள் – லலிதா திரிபுரசுந்தரி தேவ்யை ………..
- துர்க்கை – துர்க்கா தேவ்யை………..
- இலட்சுமி- லட்சுமி தேவ்யை ……..
- சரஸ்வதி – சரஸ்வதி தேவ்யை ……
- முருகன் – வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமின் ………
2. #ஆசனத்து_இருத்தல் –
– ஒரு பூ அல்லது அட்சதை வைத்து ஆசனம் சமர்ப்பயாமி
3.1 #பாத்யம் – கால் கழுவ நீர் ஒரு கரண்டி நீர் கொடுத்து பாத்யம் சம்ர்ப்பயாமி.
3.2 #அர்க்கியம் – கை அலம்ப நீர் ஒரு கரண்டி நீர் கொடுத்து. அர்க்கியம் சமர்ப்பயாமி.
3.3 #ஆசமனீயம் – வாய் அலம்ப நீர் ஒரு கரண்டி நீர் கொடுத்து ஆசமனீயம் சமர்ப்பயாமி
4. #சங்கல்பம் – பூசை செய்ய உறுதிமொழி எடுத்தல். இடது கரத்தில் சில பூக்கள்/ அட்சதை வைத்து வலது கரத்தால் மூடி வலது தொடையில் வைத்துக்கொண்டு..
மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீ பார்வதீ சமேத பரமேசுவர சுவாமி பிரீத்யர்த்தம்
(தெய்வத்தின் நாமம்) பூஜாம் கரிஷ்யே…
பொருள் விளக்கம் –
எங்கள் பாவங்கள்/ தடைகள் துரிதமாகப் போக்கடிபதற்காக; (தெய்வத்தின் ) பூசையை இப்போது செய்கின்றேன். என்று சொல்லி கையில் உள்ள பூ/ அட்சதையை பூசைசெய்யும் பூக்கள்/ அட்சதை தட்த்தில் சேர்க்கவும்.
குறிப்பு: * தெய்வத்தின் பெயர்கள் பின்வருமாறு இணைக்கலாம்.
– சிவ பூஜாம் கரிஷ்யே
– மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே
– மஹா சுப்பிரமணிய…….
– மஹா லட்சுமி………
– மஹா சரஸ்வதி……..
– மஹா துர்க்கா……..
5.1 #ஆசன_பூசை – இடத்தில்/ ஆசனத்தில் நீர் தெளித்து
பிருதுவி துவயா திரிதா லோகா
தேவி துவம் விஷ்ணுனா த்ரிதா
துவம் ச தாரயா மம் தேவி
பவித்ரம் குரு சாசனம்
பொருள் விளக்கம் –
பூமா தேவியே, மூவுலகையும் தாங்குபவள் நீ உன்னைத் தாங்குபவர் விஷ்ணு, அப்படிப்பட்ட நீ
என்னையும் தாங்குவாயாக; தேவி இந்த இடத்தையும் புனிதமாக்குவாயாக.
5.2 #மணிக்கு_பூசை – பின்வருமாறு சொல்லி மணியை அடிக்கவும்.
ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்க்ஷசாம்
குரவே கண்டாரவம் தத்ர
தேவதாஹ் வான லாஞ்சனம்
பொருள் விளக்கம் –
தேவர்களை வரவேற்பதற்காகவும்,, இராட்சசர்களை விரட்டுவதற்காகவும், இந்த மணியை அடித்து தெய்வத்தை வரவேற்கின்றேன்.
5.3 #வருண(நீர்)/ #கலச_பூசை
கும்பம் வைத்து அல்லது பஞ்ச பாத்திரத்தில் நீர் எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, வலது கையினால் அதைத் தொட்டுக்கொண்டு/ மூடிக்கொண்டு பின்வருமாறு சொல்லி அதற்குப் பூ வைக்கவும்.
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சனினிதிம் குரு
பொருள் விளக்கம் –
கங்கையோடு யமுனை சரஸ்வதி நர்மதை, சிந்து, காவேரி; ஆகிய எல்லாப் புனித நதிகளும் இதில் வந்து பிரசன்னமாகட்டும்.
6. #பானம்_கொடுத்தல் – இளநீர் அல்லது பழரசம் வைத்துப் பின்வருமாறு சொல்லவும்.
மது பர்க்கம் சமர்ப்பயாமி
7. #ஸ்நானம்/அபிடேகம் –
ஸ்நானம் சமர்பயாமி
என்று சொல்லி சிறிது நீர் தெளிக்கவும்.
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சம்ர்ப்பயாமி
என்று சொல்லி ஒரு கரண்டி நீர் விடவும்.
குறிப்பு: விக்கிரகம் ஆயின் தோத்திரம் பாடிக்கொண்டு ,
நீர், பால், இளநீர், தேன், மற்றும் கிடைக்கும் அபிடேகத் திரவியங்கள் கொண்டு அபிடேகம் செய்யலாம்.
அபிடேகம் செய்யும்போது தோத்திரம் பாடலாம்.
8. 8. #வஸ்திரம் – வஸ்திரம் சம்ர்ப்பயாமி
#உபவீதம் சம்ர்ப்பயாமி
பொருள் விளக்கம் –
வஸ்திரம்/ சால்வை கொடுக்கவும். பூணூல் சாத்தவும்; அல்லது
அவ்வாறு செய்வதாகப் பாவித்துக்கொண்டு பூ/ அட்சதை வைக்கவும்.
குறிப்பு: அபிடேகம் செய்தால் திருவொற்றாடையால் துடைத்து வேறு வஸ்திரம் அணிவிக்கவும்.
9. #ஆபரணம் – ஆபரணம் சமர்ப்பயாமி
என்று சொல்லி ஆபரணம் சாத்தவும்; இல்லாவிடில் பாவனையாக பூ/ அட்சதை வைக்கவும்.
10. #சந்தனம்_குங்குமம் –
கந்தாம் தாரயாமி
கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி என்று சொல்லி சந்தனம், குங்குமம் வைக்கவும்.
11. #அர்ச்சனை – நாமாவளி / போற்றி / தோத்திரம் சொல்லி , புஷ்பாணி சமர்ப்பயாமி
என்று பூக்கள் போட்டு அர்ச்சனை செய்யவும்.
12.#தூபம் – தூபம் ஆக்ராப யாமி என்று சொல்லித் தூபம் காட்டவும்.
13. #தீபம் – தீபம் சந்தர்ஸ யாமி என்று சொல்லி எண்ணெய்/நெய் தீபம் காட்டி,
தூப- தீபானந்தரம் ஆஸமனீயம் சமர்பயாமி; என்று சொல்லி ஒரு கரண்டி நீர் விடவும்.
14. #நைவேத்தியம் – மணி அடித்துக்கொண்டு,
* ஓம் பிராணாய சுவாகா (ஓம் நான் இதை பிராணானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்)
* ஓம் அபானாய சுவாகா (ஓம் நான் இதை அபானனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் )
* ஓம் வியானாயா சுவாகா (ஓம் நான் இதை வியானனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் )
* ஓம் உதானாயா சுவாகா(ஓம் நான் இதை உதானனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் )
* ஓம் சமானாயா சுவாகா * (நான் இதை சமானனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் )
என்று பஞ்சப் பிராணன்களுக்கும் சமர்ப்பித்து,
* ஓம் பிரம்மனே சுவாகா (நான் இதைப் பரப்பிரம்மமாகிய இறைவனுக்குச் சமர்ப்பிக்கின்றேன்)
என்று சொல்லி ஒவ்வொருமுறை சொல்லும்போதும் பூவினால் உணவை இறைவனுக்கு காட்டி,
நைவேத்தியம் சமர்ப்பயாமி – ( அரிசி அமுதாயின் மஹா நைவேத்தியம்)
என்று சொல்லி நைவேத்தியம் பண்ணவும். ,
நைவேத்யானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி; என்று சொல்லி வாய் அலம்ப ஒரு கரண்டி நீர் கொடுக்கவும்.
தாம்பூலம் சமர்ப்பயாமி என்று சொல்லி, வெற்றிலை பாக்கு (இல்லாவிட்டால பாவனையாக அட்சதை) சம்ர்ப்பித்து, நைவேத்தியத்தை நிறைவு செய்யவும்.
15. #கற்பூர_தீபம்
ந தத்ர சூர்யோ பாதி; ந சந்த்ர தாரகம்;
நேமா வித்யுதோ பாதி, குதோயம் அக்னிஹி;
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்
தஸ்ய பாஷா சர்வமிதம் விபாதி.
பொருள் விளக்கம் –
அங்கு சூரியனும் பிரகாசிப்பதில்லை;
சந்திரன், நட்சத்திரங்களும் கூட ஒளிர்வதில்லை;
மின்னலும்; அக்கினியும் கூட அங்கு பிரகாசிக்காது;
ஒளி விடும் இவையெல்லாம்; உனது ஒளியைப் பெற்றல்லவோ பிரகாசிக்கின்றன.
என்று அல்லது
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
என்று சொல்லிக் கற்பூரதீபம் காட்டி கற்பூர நீராஜனம் சம்ர்ப்பயாமி என்று பூக்களால் புஷ்பாஞ்சலி செய்யவும். ஆசமனீயம் கொடுக்கவும்.
16. #வந்தனம் – பூசைக் குறைகளுக்கு மன்னிப்பு கோரல்/ சண்டாசர் பூசை/ சமர்ப்பணம்/ விடை கொடுத்தல்
பிரதட்சணம்:
16.1 #பிரதட்சணம்
யானி கானி ச பாபாநி
ஜன்மாந்தர கிருதாநி ச
தானி தானி விநஸ்யந்தி
பிரதட்சிணே பதே பதே
பொருள் விளக்கம் –
தெரிந்து செய்த தவறுகளும்,, தெரியாமல் செய்த தவறுகளும், இப் பிறப்பில் செய்த பாவங்களும், முற்பிறப்பில் செய்த பாவங்களும், அதன் விளைவுகளும் இப் பிரதட்சணத்தில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், நசிந்து அழிகின்றன.
என்று சொல்லி மூன்று முறை கூப்பிய கரங்களுடன் தன்னைத் தானே சுற்றி ஆன்மப்பிரதட்சணம் செய்து;
16.2 #மன்னிப்பு_கோரல்
மந்த்ர ஹீனம் கிரியா ஹீனம்
பக்தி ஹீனம் மகேஸ்வரா
யத் பூஜிதம் மயா தேவா
பரிபூர்ணம் ததாஸ்து தே
பொருள் விளக்கம் –
ஓ! மகேஸ்வரா! நான் செய்த இப் பூசையில் மந்திரங்கள் ஓதுவதில் நேர்ந்த குற்றங்கள், கிரியை முறைகளில் நேர்ந்த குற்றங்கள், பக்தியன்பில் உள்ள குறைபாடுகள் யாவையும் பொறுத்து; இதைப் பரிபூரண பூசையாக ஏற்றருள்வாயாக..
என்றோ அல்லது
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா கச்சியேகம்பனே.
என்றோ சொல்லிக்கொண்டு பூசையில் உள்ள குற்றம் குறைகளுக்கு மன்னிப்பு கேட்கவும்.,
16.3 #சண்டேசுர_பூசை:
பூசை மணியிலே சண்டேசரை எழுந்தருளப் பிரார்த்தித்து;
சுவாமிக்கு முன்னர் சாத்திய புஷ்பம் சமர்ப்பித்து,
படைத்த அமுதும் சர்ப்பித்து,
ஆசமனம் கொடுத்து
மணியை மும்முறை அடித்து,
மும்முறை கைதட்டி வணங்கவும்.
16.4 #நமஸ்காரம்:
அட்டாங்க/ பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்து,
16.5 #சமர்ப்பணம்:
பூசையும், பூசைக் கேற்ற பொருள்களும்,, பூசை செய்யும்
நேசனும், பூசைகொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனு மாகிப், பூசை யான்செய்தேன் எனுமென் போத
வாசனை அதுவு மான, மறைமுத லடிகள் போற்றி.
என்று சொல்லி, ஒரு பூ/ அட்சதை நீருடன் சமர்ப்பித்து பூசையையும், பூசையின் பலனையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கவும்.
16.6 #வழியனுப்பல்:
(தெய்வத்தின் பெயர்) யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி
என்று சொல்லி வரவழைத்த தெய்வத்தை வழியனுப்பி வைக்கவும்.
மும்முறை ஆசமனம் செய்து பூசையை நிறைவு செய்யவும்.
பின்னர்,
தீர்த்தம், விபூதி, குங்கும பிரசாதங்களை முதலில் தான் எடுத்து
சுவாமியை எதிர் நோக்காத வண்ணம் கிழக்கு/ வடக்குக்கு முகத்தைத் திருப்பி வைத்து அணிந்துகொண்டு ,
மற்றவர்களுக்கும் பிரசாதம் கொடுக்கவும்