விநாயகர்
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
முருகன்
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
தேவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி – காஞ்சி
மாவடி வைக்கும் செவ்வேள்
மலரடி போற்றி- அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
சிவன்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
அம்பாள்
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
முத்தி ஆனந்தமே.
விஷ்ணு
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
SriRamar
Sree Ram Jaya Ram Raghu Ram
நவக்ரஹம் : சூரியன்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.