விநாயகர்
மூஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து.
முருகன்
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணி பீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா
“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “
சிவன்
தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.
அம்பாள்
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி !
விஷ்ணு
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
Sri Ramar
Sree Ram Jaya Ram Jaya Jaya Ram
நவக்ரஹம்: செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன்
வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு