சனி கிழமைக்கு உரிய மந்திரங்கள்

விநாயகர்
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக எனவினை கடிதேகும் .

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாஸுபா ஸுநாசகம் நமாமிதம் விநாயகம்.

முருகன்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

சிவன்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

அம்பாள்
தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவந்தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள்அபிராமி கடைக்கண்களே.

விஷ்ணு
ஸ்ரீ நிவாஸா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா
திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா
பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
சங்கடஹரணா கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா

Sri Ramar

Sree Ram Jaya Ram Sundara Ram

நவக்ரஹம்: சனி
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி